கதையாசிரியர் தொகுப்பு: சந்திரா

14 கதைகள் கிடைத்துள்ளன.

அழகேசனின் பாடல்

 

 மகேந்திரா வேன் மலைப் பாதையில் பயணித்துக்கொண்டு இருந்தபோது, மதியப் பொழுதின் வெயில் மலையின் பனியைக் குறைத்து மிதமான வானிலையால் உடலை இதமாக்கிக்கொண்டு இருந் தது. ஒழுங்கற்று ஓடிக்கொண்டு இருந்த தனத்தின் இதயம் சீராக இயங்கி, ஒரே ரிதமான துக்க நிலையை அடைந்தது. அந்த இயற்கை, துக்கத்தை போதைபோல் நெஞ்சில் மிதக்கவைத்தது. மலையின் வளைவுச் சாலையில் செல்லும்போது பள்ளத்தில் ஒரு பறவையின் இறக்கையைப்போல் மிதந்துகொண்டு இருந்த மஞ்சளாற்றை அவளிடம் காட்டி, அந்த மலைக் கிராமத்தில்தான் அவள் வாழப்போகிறாள் என்றார்கள்


வன்மம்

 

 துருப்பிடித்த சைக்கிள், உடைந்த கார் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார் ராசு. ஒரு குச்சியால் தரையில் ஏதோ கோடு போட்டுக்கொண்டு இருந்த அவர் மனம், துக்க நெருக்கடியில் அலறியது. வயிற்றில் உருண்டோடிய துயரத்தின் நெடி, கண்களில் திரண்டு பெருகியது. உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் மகன் ஸ்டாலினை எப்போது வேண்டுமானாலும் வெளியே கொண்டுவரலாம். அவனுடைய பைக்கும் பழைய பைக், சைக்கிள் கிடந்த இடத்தில், நம்பர் பிளேட் நெளிந்துபோய், பைக்கின் கண்ணாடிகள் உடைந்து சிதைந்துகிடந்தது. அதைப்


மஞ்சனாத்தி மலை

 

 எங்களுக்கு கேரளாவில் மஞ்சனாத்தி மலை என்ற இடத்தில் மிளகுக் காடு இருந்தது. அமராவதி பாலத்தில் இருந்து மஞ்சனாத்தி மலைக்கு கால் வலிக்க அம்மா பின்னால் நடந்து போன காலங்களில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். இந்த வழிப் பயணத்தில் மூன்று மைல் தூரம் காட்டுக்குள்ளே நடந்து போக வேண்டும். அரிசி, பருப்பு, வீட்டுச் சாமான்கள் என்று அதிக சுமை எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால், நடக்கச் சிரமமாக இருக்கும் என்று குமுளி போய், அங்கே இருந்து வேறு பஸ்


சூது நகரம்

 

 நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ, பஸ்ஸில் ஏறியோ, தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந் தான். யாரையேனும் தன் மீது கவனம் செலுத்த வைப்பதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப் பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக் குள் மிக மெதுவாக நுழைந்தான்… வேலை பார்த்த எந்த இடத்திலும் அவனை யாரும் மரியாதையாக நடத்தியது இல்லை.


பன்னீர் மரத் தெரு!

 

 கனவு ஒளிரும் தெருவாக அது இருந்தது. ஆயர்குலப் பெண்களைப் போல மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துத் திரிந்தனர் சிறுமிகள். உடல் பூத்த பூரிப்பும் இறுமாப்புமாக பால்ய மனம் மாறாமல் இருந்தனர் குமரிகள். கரிய இருள் தெருவில் அப்பிக்கிடக்கும் பின்ஜாமங்களில் கனவுகண்டு சிரிப்பவர்களாக இருந்தார்கள் குழந்தைகள். எப்போதும் பன்னீர்பூக்கள் உதிர்ந்துகிடக்கும் அந்தத் தெருவுக்கு கோயில் தெரு என்று பெயர் இருந்தாலும், எல்லோரும் பன்னீர் மரத் தெரு என்றே அழைத்து வந்தார்கள். ஆண்பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகள்தான் அங்கே அதிகமாக இருந்தார்கள் அல்லது பெண்பிள்ளைகளின்

Sirukathaigal

FREE
VIEW