கதையாசிரியர் தொகுப்பு: சந்திரவதனா செல்வகுமாரன்

29 கதைகள் கிடைத்துள்ளன.

பதியப்படாத பதிவுகள்

 

  தூறல் போல் தொடங்கி – சோ – வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும் செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும் கண்களும் காணாமல் போயிருந்தன. சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச்


தீர்வுகள் கிடைக்குமா..?

 

  வீட்டுக்குள் நுழைந்த போது வழமையாக கணணிக்கு முன்னால் உட்கார்ந்து இன்ரநெட்டில் உலகம் முழுவதும் சட்டன் செய்யும் என் கடைக்குட்டி வரவேற்பறையில் France 98 (உலக வெற்றிக் கிண்ண கால் பந்துப் போட்டி) பார்த்துக் கொண்டிருந்தான். நான் வந்ததே தெரியாத அளவுக்கு விளையாட்டு வீரர்களிலும் அவர்களிடம் உதைபடும் பந்திடமும் தன்னை மறந்து ஊன்றிப் போயிருந்தான். அவனுக்கருகில் இருந்து France 98 ஐப் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் மட்டும் திரும்பி கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தார். -


கலை வளர்க்கும் பூனைகள்

 

  மண்டபம் நிறைந்திருந்தது. மேடையில் பரதம் நர்த்தனமாடியது. இளவட்டங்கள் கதிரைகளில் இருக்காமல் மண்டபத்தின் சுவரோரமாக நின்று நர்த்தனத்தையோ அல்லது நர்த்தகிகளையோ ரசித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் இருக்கைகளை விட்டெழுந்து அங்குமிங்குமாக ஓடிக் கொண்டு திரிந்தார்கள். சுந்தரேசன் இந்தக் களேபரங்களுக்குள் மண்டபத்துள் அடங்கிப் போய் விடாமல் வெளியிலே நின்றார். அவர் அப்படித்தான். மண்டபத்துள் மனைவியின் அருகில் உட்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விட வெளியில் பெரிய மனுசத் தோரணையுடன் கன்ரீனிலோ… கசட் விற்கும் இடங்களிலோ… நின்றால்தான் நடனமாடி விட்டுப் போகும் பெண்களுடனோ


சொல்லிச் சென்றவள்!

 

  பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா..! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது. விமானத்திலிருந்து குதிக்க முடியுமா..? என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்..! விமானம் ஏதாவதொரு நாட்டில் தரையிறங்கும் போது பிள்ளைகளுடன் ஓடி விடுவோமா..? மனசு நிலை கொள்ளாமல் தவித்துத் தத்தளித்துக் கொண்டேயிருந்தது. பேதைத் தனமாக எதையெதையெல்லாமோ எண்ணிக் குழம்பியது. எப்படிப் போய் யார் முகத்தில் முழிப்பது?


இலவசம்

 

  தபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த கோமதிக்கு இன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது. விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கிற நேரம் பார்த்து…. அந்தக் கடிதம் வந்ததில் இருந்த சந்தோசமெல்லாம் வடிந்து போயிற்று. பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் எப்போதும் தானும் வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு கோமதி வீட்டிலேயே நிற்பாள். போனமாதமும் ஏதோ காரணத்துக்காக பிள்ளைகளுக்கு நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை. கோமதி விடுப்பு எடுத்து விட்டு வீட்டில் நின்றாள். அப்படி அவள்