Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: சந்திரமௌளீஸ்வரன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் பெருமாள்

 

  என் பெரியப்பாவிற்கு என் மீது மகா கோபம். “இதோ பாரு சந்துரு.. ஆத்துல நடக்கிற விஷேசத்துக்கு முதல்ல குல தெய்வத்துக்கு கைல எழுதி பத்திரிக்கை அனுப்பி, அங்கேர்ந்து ஆசிர்வாதம் வந்த பின்னாடி தான் பிரிண்ட் அடிக்கிறது வழக்கம்.. நீ சொல்ற மாதிரியெல்லாம் செய்ய முடியாது” விஷயம் இது தான்.. என் மகளுக்கு ஆயுஷ ஹோமம்.. பெருமாளுக்கு கைல எழுதற பத்திரிக்கை ஒரு காப்பி எக்ஸ்ட்ரா எழுதி பெஞ்சமினுக்கு அனுப்பனும்னு நான் சொல்றேன். காரணம் என் அம்மா


MAN OF THE MATCH

 

  எனது நண்பன் வில்லியம்ஸ் அசகாய சூரன். இப்போது நாங்களிருவரும் தினசரி எஸ். எம். எஸ் / சாட் / மெயில் எப்போதாவ்து போன் என்ற தூரத்த்தில் இருந்தாலும் சின்ன வயசில் ஒன்றாகவே இருந்தோம். என்னைவிட நாலு வயசு பெரியவன். கையெழுத்துப் பத்திரிக்கை; பின்னர் அதைப் பிரிண்டில் கொண்டு வந்தது என்ற எனது கல்லூரி வயசு சாதனைகளின் பின்னால் மறைவாக நிற்கும் ஆறடி ஆசாமி. இந்தக் கதை அவனைப் பற்றி அல்ல “டேய் ஒரு கிரிக்கெட் டோர்ணமெண்ட்


நான் மகேந்திர பல்லவனா?

 

  “மூணு நாள் லீவு சிதம்பரம், சீர்காழி கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாமா?” நண்பர் எல் ஐ சி வெங்கட்ராமன் ஆரம்பித்து வைத்தது தான். ”வைத்தீஸ்வரன் கோவில் போய் நாடி ஜோஸ்யம் பார்ர்கலாம்” என் சகா தியாகராஜன் ஆர்வத்தை ஜாஸ்தியாக்கினான். “அதென்னப்பா நாடி ஜோஸ்யம் அடிக்கடி போறியே கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்” என்று நான் கேட்டது தான் தாமதம். ”அதாவது உலகத்தில் பிறந்த, பிறக்கப் போற எல்லாரப் பத்தியும் ஓலைச் சுவடியில் எழுதி வச்சிருக்கும்” “ லாஜிக்கலாகவே


இங்கேயிருந்து … அங்கே

 

  சடகோபன் இந்தமாதிரி ஒரு நிலவறையில் கச முசாவென ஒயர்கள் பிண்ணிய சூழலில் லாபரட்டரி வைத்திருப்பான் என ஒரு எறும்புக்குக் கூட சந்தேகம் வராது. “ஹேமா.. இந்த தடவை பாரு.. ஹுயுமன் டிரான்சிஷன் சக்ஸஸ் ஆயிடும்.. அப்புறம் நோபெல் பரிசு நிச்சயம்.. உன் பேரும் பிரபலமாயிடும்” ஹேமாவுக்கு நோபெல்லைவிட அங்கிருந்து தப்பித்தால் போதும் என்பதே பிரதானமாயிருந்தது. அமெரிக்கா அனுப்புகிறேன் என்று சொல்லி சாமர்த்தியமாய் கிழவன் பாஸ்போர்ட்டை கவர்ந்து எங்கேயோ ஒளித்து வைத்துவிட்டான். “எங்கே இந்த பாஸ்கரை காணோம்”


ஒரு வேளை

 

  ”என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்” ”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும் தயார். நீங்கள் ஒப்புக் கொள்ள தயங்குவதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது” “என்ன சொல்கிறீர்கள்.. இன்னும் 4 ரன்கள் அடித்தால் வெற்றி. அதுவும் நாளை போட்டியின் கடைசி தினம் ஐந்தாவது நாள். ஒரு நாள் முழுவது இருக்கிறது..” “ஆனால் உங்கள் ஒரு விக்கெட் தானே கைவசம் இருக்கிறது.. அதனால் தான் சொல்கிறேன்.. மொத்த விஷ்யமும் உங்கள் கையில்