Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: சத்யஸ்ரீ

11 கதைகள் கிடைத்துள்ளன.

மட்டைப்பந்து போர்

 

  ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் மற்றும் அஜித் எல்லோரும் உடன்பிறந்தவர்கள். சின்ன வயதிலிருந்தே ரொம்ப ஒட்டுதல். ரஜினிக்கு மட்டைப்பந்து விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும், ஆனால் அவர் தில்லுமுல்லு ஏதும் பண்ணாமல் நேர்மையாக விளையாடக்கூடியவர். கமல் ஒரு சகலகலா வல்லவர். பந்து போடுவது, மட்டையால் அடிப்பது, எதிரணியினர் அதிக ஓட்டங்கள் எடுக்காமல் தடுப்பது என ஆயகலைகளிலும் வல்லவர். இவரை எல்லாருக்கும் பிடிக்கும். விஜயகாந்த்தும் நன்றாகத்தான் விளையாடுவார், ஆனால் முன்கோபம் அதிகம். அடிக்கடி வாய்த்துடுக்காகப் பேசி எதிரணியை வம்புக்கு


சேர்ந்தும் சேராமலும்

 

  “ஹாய்டா! உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கியா?” “ஹாய்டி! உன்னைப் பார்க்காமல் சூப்பரா இருக்கேன், நீ எப்படி இருக்கே?” ஏதோ பலநாள் கழித்து சந்திக்கும் நண்பன்/நண்பியின் ஜாலியான உரையாடல் இது என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் கணவன், மனைவி அமுதன் மற்றும் காயத்ரியின் உரையாடல்தான் இது. இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார்கள். இருவரும் தத்தம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான தனி நபர்களுக்கோ (அவர் மிகப்பெரும் பணக்காரராக இருக்கும் பட்சத்தில்)


எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்

 

  “இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர், மக்கள் போற்றும் மகேசன், எதிரிகள் அஞ்சும் எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன் அவர்களுக்கு நாள்பட தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தீராத வயிற்றுவலியை எவர் தீர்த்துவைக்கிறாரோ அவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.” – அரண்மனை மதில் மேல் நின்று முரசு அடித்து பறைசாற்றினர். அந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் நகைத்துக்கொண்டே கலைந்தனர். மேல்கலிங்கத்து சோழிங்கம், தென்னிந்தியாவின்


நிஜமான கற்பனைக் காதல்

 

  1 <<காதல் என்பது தன்னுயிரை வாடகைக்கு அமர்த்துவது, இன்னோர் உடலில்>> “ப்ப்ப்ப்பா. என்னமா எழுதறாரு!! அவரோட கவிதைகள் படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இல்லையேன்னு ஏக்கமா இருக்குடி” “நீ வேற, அவரு கவிதைகள விட கதைகள் இன்னும் சூப்பர் தெரியுமா? நீ கவிதய விட்டு வெளிய வரமாட்ற” “காதல் பத்தி சொல்றதுக்கு இவ்ளோ விஷயங்கள் இருக்கான்னு அவர் கவிதைகள் படிக்கும்போதுதான்டி தெரியுது. அந்த விஷய ஞானத்தை காட்டலாம்னா எனக்கு காதலி இல்லையே? வேணும்னா ரமேஷ்கிட்ட பர்மிஷன்


பொய்மையும் வெல்லும்

 

  “மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே” “நீ மொதல்ல என்கிட்ட இந்த வழக்கைக் கொண்டு வந்திருந்தா நிலைமையே தலைகீழ் ஆயிருக்கும். உன்னை யாருய்யா என் தொழில் எதிரி ஈஸ்வரன் கிட்ட போகச் சொன்னா?” “உன் வாதத் திறமையை வெச்சு எங்கள மாதிரி அப்பாவிங்க வயித்துல அடிக்கறியே! நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட” “ஒருத்தன் நம்மகிட்ட சரணடைஞ்சிட்டா, நம்ம உயிரை மட்டும் கொடுக்காம மத்தது கொடுத்து காப்பாத்திடணும் –