கதையாசிரியர் தொகுப்பு: சத்யஸ்ரீ

13 கதைகள் கிடைத்துள்ளன.

நான் நானல்ல

 

  பயந்து போயிருந்தான் கபிலன். சில நாட்களாகவே ஏதோ இனம் காணமுடியாத விஷயம் பயமுறுத்திக் கொண்டு இருந்தது. நிம்மதியாக இருக்க முடியவில்லை. யாரிடம் போய் சொல்வது எனப் புரியவில்லை. யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. உறங்கும் போதும். குளிக்கும் போது. தெருவில் பலருக்கு மத்தியில் நடக்கும் போது. பலருடன் பேருந்தில் பயணம் செய்யும்போது. பலர் கூடும் பொது இடங்களில் இருக்கும் போது. இப்படி எங்கு யாருடன் இருந்தாலும் அந்த பயம் அவனை விட்டு அகல மறுத்தது. மூன்று


கனவில்லை, நிஜம்!

 

  ஷாலினி ஒரு இருட்டறையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள், சரியாகச் சொன்னால் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தாள். அவளது உடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏதோ திரைச்சீலையை உடலில் சுற்றி வைத்ததுபோல. அது போதாதென அறை முழுக்க வெவ்வேறு இடங்களிலிருந்து திரைச்சீலை துணித் துண்டுகள் போன்றவைகள் அவள் உடையுடன் இணைந்திருந்தன. அவள் அந்த உடையின் இணைப்புகளை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டது, தாங்க முடியாமல் ஷாலினி இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள். அப்போது ஒரு கை


எங்க காலத்துல…

 

  மாதவன் ஸாரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். ரொம்ப சுவாரஸியமான ஆள். நிறைய அறிவு. நல்லா பழகுவார். ரொம்ப பேசுவார். பிறருக்கு உதவிகள் செய்ய தயங்கமாட்டார். சாயந்திரம் ஆனால் போதும், எங்கள் குடியிருப்பில் உள்ள சிறு பூங்காவின் இருக்கையில் வந்து உட்கார்ந்துகொண்டு, போவோர் வருவோரை எல்லாம் விடாப்பிடியாக அழைத்து உட்கார வைத்து ரம்பம் போட ஆரம்பித்துவிடுவார். அவருக்கு பயந்தே அனைவரும் வேறு நுழைவாயில் வழியாகச் செல்வார்கள். யாருமே அகப்படாவிட்டால் வாயிற்காப்போனிடம் கதை


யார் மேல தப்பு?

 

  காட்சி 1: “என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!” “இல்லைடி. ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்” “என்னடி ஆச்சு? என்கிட்ட சொல்லவேயில்ல. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?” “சின்னதா ஆரம்பிச்சி, பூதாகரமா ஆயிடுச்சி” “யார் மேல தப்பு?” “ரகுதான் எல்லாத்துக்கும் காரணம். எப்பவுமே பொய் சொல்லிகிட்டே இருந்தா, எனக்கு அவன் பேர்ல ஒரு நம்பிக்கையே வரமாட்டேங்குதுடி” காட்சி 2: “கலாதான் எல்லாத்துக்கும் காரணம். என்னை நம்பவேமாட்டேங்கறாடா” “ஏன்


கார் வாங்கப் போறேன்

 

  “நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” – வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன். “அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே சோதனை ஓட்டம் போகலாம்னு படுத்தமாட்டீங்களே?” தர்மபத்தினி லாவண்யா. “வாழ்த்துக்கள் சுந்தர்! எவ்ளோ காசு ஆகும்டா?” அப்பா கிருஷ்ணன். “கண்ணு! உனக்கு திருப்தியா இருக்கா? எல்லாரும் ‘தாமதம் ஆகுது’ன்னு திட்டறாங்கன்னு ஏதோ ஒண்ணு வாங்கணும்னு அவசரப்படாத” அம்மா அம்புஜம். “அப்பாடா! மொதல்ல என் நண்பர்கள் எல்லார் கிட்டயும் சொல்லணும்” வெளியில் ஓடினான் பையன் கேசவ். “ஹையா