கதையாசிரியர் தொகுப்பு: சத்யராஜ்குமார்

20 கதைகள் கிடைத்துள்ளன.

வணக்கம்

 

  அவள் அழகான பெண் என்பதையும் மீறிக் கோபம் வந்தது. இடம் நார்ட்ஸ்டார்ம் பார். பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஸ்பென்ஸர் ப்ளாஸா மாதிரியான பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சின் ஒரு மூலையிலிருக்கும் காபிக்கடை. நாளெல்லாம் கம்ப்யூட்டரை முறைத்து முறைத்து போர் அடித்தால் அங்கே காபி சாப்பிடப் போவோம். வழக்கமாய் ” ஹலோ ” – சொல்லும் காபிக் கடை அமெரிக்க அழகி அன்றைக்கு, ” நமஸ்தே ” என்றதும்தான் கோபம் வந்தது. ஆச்சரியப்பட்டுப் போய் அவளைப் புகழப்


இடமாறு தோற்றப் பிழை

 

  சுனாமியே வந்து கதவைத் தட்டினாலும் தலையைப் பத்து முறை வாரிக் கொண்டு இரண்டாம் தடவையாக ஃபேர் அண்ட் லவ்லியை அப்பிக் கொண்டு சாவகாசமாகத்தான் வருவான் ப்ரதீப். காரை ஸ்டார்ட் பண்ணி உட்கார்ந்து ஐந்து நிமிஷங்கள் ஆகி விட்டன. பொறுமை இழந்து செல்போனைத் தடவினேன். கையில் சில பூங்கொத்துக்களோடு ஒரு வழியாய் வந்தே விட்டான். ” இதை விட்டுட்டோம். ” சொல்லிக் கொண்டே அவசர அவசரமாய்க் காரின் உடம்பில் பூக்களை ஒட்டினான். ஏற்கெனவே கார் பூக்களாலும் பலூன்களாலும்


பஸ் ஸ்நேகம்

 

  பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் தயக்கமாய், ” ஹலோ ” சொன்னாள். என் முகத்தில் அரும்பிய புன்னகையைத் தொடர்ந்து பேசத் துவங்கினாள். ” என் பேர் உமா. ஆபிஸ்ல உங்களைப் பார்த்திருக்கேன். நீங்களும் எஸ்பிசி-லதானே வேலை செய்யறிங்க ? ” ” நானும் உங்களைப் பார்த்தேன். இன்னிக்குக் காலைலதானே ஜாயின் பண்ணினிங்க? ” தலையாட்டினாள். ” ஆமா. ஆனா எல்லாரும் என்னை பரம விரோதி மாதிரி பார்க்கறாங்க. ஏன்னு புரியலை. ” ”


இந்தியன்

 

  இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள். ” கண்டிப்பா நாம நியுஜெர்ஸியிலிருக்கும் உன்னோட அண்ணன் குடும்பத்தோட ஒரு வாரம் தங்கியிருக்கப் போறோம். இந்தியக் குடும்பப் பழக்க வழக்கங்களை எல்லாம் நான் கத்துக்கப் போறேன். அப்புறம்தான் நம்ம கல்யாணம். அப்பதான் உங்க அம்மா அப்பாவுக்குப் பிடிச்ச பொண்ணா என்னால நடந்துக்க முடியும். ” உன்னுடைய வெள்ளைத் தோலையும், பழுப்புக் கூந்தலையும், அதை நீ


ஸார், நாம போயாகணும்

 

  மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான். ஜன்னலைப் பார்த்தான் வரது. ஜன்னல் கண்ணாடியில் தலைகள் திரண்டன. நாற்பது வயதுக்காரர் ஒருவர் பதட்டத்துடன் சொன்னார். ” தண்ணித் தொட்டிக்குள்ள குழந்தை விழுந்துருச்சுங்க. அரை மணி நேரமா உயிருக்குப் போராடுது. ஆஸ்பத்திரில விட்டுருங்கய்யா… ” வரது ஜன்னல் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டே, ” நாங்க அவசரமா போயிட்டிருக்கோம். வேற வண்டி பாருங்க. ”