Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: சதங்கா

31 கதைகள் கிடைத்துள்ளன.

நீங்க தான் ஜட்ஜ் !

 

  அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி … உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில். “ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ஒரு பய கூப்பிட மாட்டேங்கிறான்னு பொலம்பனீங்க ! அந்த ஆத்தா கண்ணத் தொறந்துட்டா …” என்று கன்னத்திலும் போட்டுக் கொண்டாள் ரேவதி. என்னது ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸுக்கே இந்த அலப்பரையானு