Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: சதங்கா

31 கதைகள் கிடைத்துள்ளன.

உட்ப‌கை உற்ற‌ குடி

 

  அலுவல‌கத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும். “ஜேம்ஸ், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா …” என்று இழுத்தாள் ராகினி. அந்தப் பண்ணாட்டு நிறுவனத்தின் சென்னை கிளைக்கு ஜேம்ஸ் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அந்நிறுவனத்தின் மென்பொருள் உற்பத்தி முழுக்க முழுக்க சென்னை என்று ஆகிப் போனது. அதன் முக்கிய பொறுப்பில், அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஜேம்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். ஜேம்ஸின் “ம்ம் …” என்ற தலையாடலுக்கு, சுற்றும் முற்றும் பார்த்து


கிராமத்தில் மழையும், மின்வெட்டும்

 

  சட சட என்று ஆரம்பித்த பெரும் தூறல், சில நொடிகளில் மண் தரையை நீர்த் தரையாய் மாற்றியது. நீரின் ப‌ள‌ப‌ள‌ப்பில் நில‌ம் மின்னிய‌து. “ஏலேய், சின்னச்சாமி … தூத்த பெரிசா ஆரம்பிச்சிருச்சு, ஆட்டப் புடிச்சி கட்டுடா” என்று குர‌ல் விடுத்து, அங்குமிங்கும் திரிந்த கோழிகளை, ஒன்று திரட்டி கூடையிட்டு மூடினாள் கருப்பாயி. கொல்லையில், நான்கு கல்தூண்களின் மேலே, வைக்கப் படப்பின் கீழ், ஆடுகளைக் கட்டினான் சின்னச்சாமி. ஆடுகள் சிலுப்பிக் கொண்டன. “இந்தா, கோழி கூடைய‌ அப்ப‌டியே


அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்

 

  நீண்டு அக‌ன்ற‌ அந்த‌ அடுக்குமாடிக் குடியிருப்பு ப‌ருத்த‌ ஆல‌ம‌ர‌ம் போல‌ ப‌ர‌ந்து விரிந்து காட்சிய‌ளித்த‌து. ப‌ல்வ‌கைப் ப‌ற‌வைக‌ள் அதில் வாச‌ம் செய்த‌ன‌. ம‌ன்னிக்க‌ணும், ப‌ல்வ‌கை ம‌னித‌ர்க‌ள் அதில் வ‌சித்து வ‌ந்தார்க‌ள். முறையே ப‌ணி செய்து, போதுமென‌ ஓய்வு பெற்று, அறுப‌தைக் க‌ட‌ந்த‌ ஜெகந்நாதனும், ராம‌சாமியும் அங்கு வ‌ந்த‌திலிருந்து ந‌ண்ப‌ர்க‌ளும் ஆனார்க‌ள்.’ப்லாக் ஈ’இல் நாலாவ‌து மாடியில் ராம‌சாமியின் வீடு. சில ப்லாக் தள்ளி ‘ஐ’இல் கீழ் தளத்தில் ஜெக‌ன் வீடு. தின‌ம் மாலை ஒருவ‌ர் வீடு மாறி


உத்தரவின்றி உள்ளே வா !

 

  “ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவளைக் காதலிக்கறேன் என்றும் சொல்றே. இதெல்லாம் நல்லதுக்கில்ல … ஆமா … சொல்லிட்டேன்” கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், ‘மியாவ்’ என்று கத்தணும் போல் இருந்தது. கேசம் புறம் தள்ளி, பூனைக் கண்களில் நோக்கி, புன்னகை பூத்து சென்றாள். ‘ம்… இவளென்ன சிரித்துச் செல்கிறாள்’. நினைவுகளோடு வகுப்புக்குச் சென்றான். “டேய் … உன்னைத்


பிடித்ததும் பிடிக்காததும்

 

  ‘நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க’ என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன். அந்த அறையில் ஒரு பத்து பதினைந்துபேர், இழுத்து விட்ட மெத்தையில் அமர்ந்து ஆளுக்கு ஒரு தலைகாணி போன்ற முன்டில் சாய்ந்தோ, விழுந்தோ அமர்ந்திருந்தனர். சங்க இலக்கியம், மார்க்ஸியம், அம்பேத்கார்,புதுக்கவிதை,ஹைகூ,திரைத்துறை என பாகுபாடின்றி அவர்கள் உரையாடல் இருந்தது. சற்று நேரத்தில் இனிமைவேந்தன் அருகில் அமர்ந்திருந்த வயதான எழுத்தாளர் ஒருவர், ‘எங்கே உன் படைப்புக்களை கொடு’ என்று என்னிடம் இருந்த