கதையாசிரியர் தொகுப்பு: சங்கர் துரைஸ்வாமி

1 கதை கிடைத்துள்ளன.

புத்திரசோகம்

 

  பீட்டர்ஸ்பேர்க். பனிக்காலத்தின் அந்திநேரம். பனி எங்கும் வெண்பூக்களாய் பொழிந்தபடியும், சற்று நேரம் முன் ஏற்றி வைக்கப்பட்ட தெருவிளக்கை சோம்பறித்தனமாக சுற்றியபடியும், மெல்லிய அடுக்குகளில் மெண்மையாக கூரைகளிலும், குதிரைகளின் முதுகெங்கிலும், படர்ந்திருந்தது. தோள்பட்டைகளில், தொப்பியில், உடையில் என எங்கும் வெண்பனியோடு காணப்பட்ட குதிரைவண்டிக்காரர் அயோனா போடபோவ்(Iona Potapov) ஒரு வெண்ணிற பூதம் போல் காட்சியளித்தார். தன் இருக்கையில் எந்த சலனமுமின்றி அமர்ந்திருந்த வண்டிக்காரரின் உடம்பு வளைந்து குனிந்துதிருந்தது. தொடர் பனிபொழிவில் தன் மீது பனி, குவியலாக படர்த்திருந்தாலும்