கதையாசிரியர் தொகுப்பு: க.நா.சுப்ரமண்யம்

6 கதைகள் கிடைத்துள்ளன.

பேசா மடந்தை

 

 இடுப்பில் ஒரு வயதுக் குழந்தையுடன் பேசாமடந்தை நேற்று ஆற்று வெள்ளத்திலே இறங்கிவிட்டாள். அந்த ஜலப் பிரளயமாவது அவளுடைய மனக் கொதிப்பை ஆற்றியதா என்பது சர்வேஸ்வரனுக்குத்தான் வெளிச்சம்! சித்திரப்பாவை போன்ற பருவத்திற்குப் பேசும் சக்தியையும் அளித்திருக்கக் கூடாதா அந்தப் பொல்லாத பிரம்ம தேவன்! அதுதானில்லை; அவளுக்குப் பிறந்த பெண்ணும் பேசா மடந்தை யாகவேயா இருக்க வேணும்? வயிற்றில் சுமந்திருந்த பத்து மாதமும் தனக்குப் பிறக்க இருந்த குழந்தை பேசுமா, பேசாதா என்ற கவலையில் இரவு பகலாகத் தூக்கமின்றியே காலங்


தேள்

 

 சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா” என்றாள். “ஏன் பாட்டி?” என்றேன். “ஏன்னு கேட்டால், என்னன்னு சொல்றது. ராத்திரி, அஸ்தமிச்சப்புறம் அந்தப் பக்கமா, தனியா வரப்படாது!” என்றாள் சுந்தாப்பாட்டி. “நான் தனியா வரல்லையே, பாட்டி! அவாத்துச் சர்மாவும் கூட வந்தான்.” “அவன் ஒரு சமத்து! நீ ஒரு சமத்து” என்றாள் பாட்டி. பிறகு சொன்னாள்: “யார்கூட வந்தால்தான் என்ன? பயந்துகொண்டு விட்டால் அப்புறம்


ஆடரங்கு

 

 கூட்டம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஏதோ பொறுக்கி எடுத்த சிலருக்கு, உபயோகப்படக் கூடியவர்களுக்கு, கலை உலகிலே முக்கியஸ்தர்களுக்கு மட்டுந்தான் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. பத்துப் பதினைந்து பெண்மணிகள், ஏழெட்டுக் குழந்தைகள், இருபது ஆண்கள்-இவ்வளவுதான். பெண்களில் சிலரையும், குழந்தைகளையும் தவிர மற்றவர்களெல்லாம் கலை உலகில் பெரிய ஸ்தானம் வகிப்பவர்கள்; அந்தச் சில பெண்களும் குழந்தைகளுங்கூடப் பெரியவர்களின் வீட்டுக் குழந்தைகளும், பெண்களுந்தான். லஷ்மி பாக்கியசாலி. அவளுடைய அரங்கேற்றம் நல்ல சுபசூசகங்களுடன் கலைத்தூண்’களின் நிழலில் நடக்க இருந்தது. லக்ஷ்மி உள்ளே வரும்போதே, “கீழே


பேரன்பு

 

 “இன்னிக்கி ஏதாவது நல்ல ராஜா ராணிக் கதை சொல்லு பாட்டி” என்று சுந்தாப்பாட்டியின் மடிமேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பண்ணினாள் சரோஜா. “ராஜா ராணிக் கதையா? எனக்குத் தெரிஞ்ச ராஜா ராணிக் கதைகளையெல்லாம் உனக்குச் சொல்லியாயிடுத்தே!” என்றாள் சுந்தாப்பாட்டி. “புதுசா ஏதாவது சொல்லேன், பாட்டி!” என்று சரோஜா உத்தரவிட்டாள். “புதுசா எனக்கு ஒண்ணும் தெரியாதேடி, கண்ணு!” “உனக்கா தெரியாது? பொய் சொல்றே நீ” என்றாள் சரோஜா ஆச்சரியத்துடன். இவ்வளவு பெரிய பாட்டி இப்படிப் பொய் சொல்றாளே


பொய்தேவு

 

 பள்ளிக்கூடத்துநிழல் ‘பொய்தேவு’ க.நா.சுப்ரமண்யம் 1946ல் எழுதிய ஒரு நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன் சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கை தேடல் குறித்த சுவையான படைப்பு. அதிலிருந்து ஒரு அத்தியாயம் இங்கு தரப்படுகிறது. மேட்டுத் தெருவுக்கு வெகு சமீபத்திலுள்ள பிள்ளையார் தெருவிலோ ஏதோ சொல்பந்தான் என்றாலும் கொஞ்சமாவது ‘உடையவர்கள்’ வீட்டிலே சோமசுந்தரம் பிறந்திருப்பானேயானால், ஐந்து வயசு ஆனவுடனே அவனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்திருப்பார்கள். விஜயதசமி அன்று மேளங்கொட்டி அவனுக்குப் புது ஆடைகள் உடுத்தி