கதையாசிரியர் தொகுப்பு: கௌரிகிருபானந்தன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறும் ஒன்பதும்

 

  வெளியே நிலா வெளிச்சம் பாலாய் காய்ந்துகொண்டிருந்தது. வெனீஷியன் ப்ளைண்ட்ஸிலிருந்து சந்திரன் அரைகுறையாய் தென்பட்டுக் கொண்டிருந்தான். மொட்டை மாடிவரையில் படர்ந்திருந்த ஜாதி மல்லிகை ஜன்னல் விழியாக நறுமணத்தை குப்பென்று வீசிக்கொண்டிருந்தது. தொலைவில் எங்கிருந்தோ பதினோரு மணியடித்த ஓசை. மறுபடியும் நிசப்தம். ஊர் முழுவதும் நிசப்தமாக தூக்கத்தில் ஆழ்ந்திருந்து. மயக்கம் குறைந்து விட்டாலும் இன்னும் முழுவதுமாக தெளியவில்லை. திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் சிறுக் குழந்தையைப் போல் அப்பாவியாக உறங்கிக் கொண்டிருந்தாள் மாலதி. குவித்த தாமரை மொட்டு போல் இருந்தன


இரண்டு வார விடுமுறை

 

  சிகாகோ, மார்ச்,1997, அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. அப்பா! நான் சிகாகோவுக்கு வந்தது முதல், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது கடிதம் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் உங்களுக்கு வேதனையைத் தருவதில் விருப்பம் இல்லாததால் சில விஷயங்களை உங்களிடம் சொல்லவில்லை. எனக்கு உதவி செய்ய முடியாத நிலையை குறித்து மேலும் வருத்தப்படுவீங்களே என்றுதான் அப்படிச் செய்தேன். ஆனால் இப்போ எனக்கு வந்த இடைஞ்சல்கள் எல்லாம் நீங்கிவிட்டன. இப்போ நான் நிம்மதியாக இருக்கிறேன். நடந்த விஷயங்களைப் பற்றி


தாமஸநாசினி

 

  “அனுபந்தம் க்ஷ்யம் ஹிம்ஸா மனபேக்ஷ்யச பௌருஷம்.” என் உடல் நடங்கியது. தொலைவில் எங்கிருந்தோ மைக்கில் அந்த சுலோகம் ஒலித்துக் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டிவிட்டது. சுலோகத்தைக் கேட்டு உடல் நடுங்குவதாவது என்று உங்களுக்கு சந்தேகம் வரக் கூடும். நான் இருந்த நிலைமை அப்படிப்பட்டது. வெட்டியானுக்கு பணம் கொடுத்து ஏதோ ஒரு சாக்கு சொல்லி வெளியே அனுப்பிவிட்டு நள்ளிரவு இரண்டு மணிக்கு சுடுகாட்டில் பிணத்தைத் தோண்டி வெளியே எடுக்கும் முயற்சியில் நான் ஈடுப்பட்டிருக்கும் போது, “தான் செய்யும் காரியங்களுக்கு