கதையாசிரியர் தொகுப்பு: கௌதம சித்தார்த்தன்

1 கதை கிடைத்துள்ளன.

வேலுத்தம்பிக் கம்மாளன்

 

  துருத்திச் சக்கரம் ஒரு லாவகமான சுழற்சியில் சுற்றிக் கொண்டிருந்தது. துருத்தி உலையின் முன் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் உமிகளின் சாம்பலில் வெடிக்கும் தீக்கங்குகள் அங்கு கப்பியிருந்த இருளைக் கண்சிமிட்டிப் பார்க்கின்றன. வெந்து புழுங்கும் உலை அடுப்பின் முன்னால் உட்கார்ந்து நெருப்புத் துண்டை இடுக்கியால் எடுத்துப் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சி. தனக்கு ஒரு அருவாள் செய்ய வேண்டுமென்று முன்பணம் தந்து விட்டுப்போனவனின் இறுகிய முகம் அவளது கண்களில் நிழலாடியது. குஞ்சரமடை அருவாளைப்போல நீளமாகவும் அதேசமயத்தில் கருமந்துறை