Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: கோ.முனியாண்டி

7 கதைகள் கிடைத்துள்ளன.

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!

 

  விஷ்ணுவிற்கு தூக்கம் கலைந்த போது, சாந்தி புன் சிரிப்போடு கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்தாள்! அவளைப் பார்த்து சிரித்தவன் ஜன்னலுக்கு வெளியே சாரல் அடிப்பதை பார்த்து ரசிக்கிறான். மேசைமேல் கடிதம் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது. சாந்தியைப் பார்த்துச் சொன்னான், வீட்டிலிருந்து கடிதம் வந்திருப்பதை…. “ஆமாம்! பார்த்தேன்!” என்று பதில் சொன்னாள் சாந்தி. “கடிதத்தை அப்பாதான் எழுதியிருக்கிறார். வேண்டுமானால் எடுத்துப் படித்துப் பாரேன்” என்று விஷ்ணு சொல்லியவுடன், கட்டிலில் இருந்து எழுந்தவள் கால்களை கொஞ்சம் இழுத்து இழுத்து


மண்மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!

 

  அஞ்சாம் வகுப்பில படிச்சிக்கிட்டு இருந்த ஆர். கணேஷ்தான் எனக்கு ரொம்பக் கூட்டாளியா இருந்தான். அவன்தான் எனக்கு ‘ஸ்லேடு’ எழுதிக் கற்றுக் கொடுத்தான். ஒடஞ்சிப்போன கண்ணாடிச் சில்லுங்கள எடுத்து, மண்ணெண்ண வெளக்குலக் காட்டி கரி படிஞ்சவொடனே, அதுல சம்பூர்ண ராமாயணம், நீலமலைத்திருடன், நான் பெற்ற செல்வம், வஞ்சிக் கோட்டை வாலிபன், மலைக்கள்ளன், புதுமைப் பித்தன்னு வரிசையா எழுதி டார்ச் லைட் அடிச்சி சொவர்ல சினிமா காட்டுறதுக்குக் கூட ஆர். கணேஷ்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தான். மொதமொதலா கண்ணாடிச்


மதகுகளின் முதுகில் உறங்கிய மீன்கள்

 

  நாகூராண்டவர் மரத்துக்குக் குஞ்சிராமன் தண்டல் விளக்கு வைத்து விட்டுப் போனவுடன், அதற்காகவே காத்திருந்தது போல்.அங்கே அது வரைக்கும் கூடி கதையடித்துக் கொண்டிருந்த வாலிபப் பசங்களில் ஐந்தாறு பேர்கள் அங்கிருந்து ஒவ்வொருத்தராக நழுவிக் கொண்டிருந்தனர்.வாலிபப் பசங்களுக்கு அந்த நாகூராண்டவர் கோயில் மரத்தடிதான், ‘ரவ்வானா’ கதைங்களக் கலாய்க்கிற இடம். தோட்டத்துல இருக்குற ஒம்போது லயத்துக்கும் போறவர்ற பாதை, நாகூராண்டவர் மரம் இருக்கிற முச்சந்தியிலர்ந்துதான் ஆரமிக்கும். மரத்துக்கு எதுத்தாப்புல கூத்துக் கொட்டாயி, அது பக்கத்துலயே குஞ்சிராமன் தண்டல் கடை. மேக்கே


முன் எப்போதோ வாழ்ந்திருந்த அரசமரங்களும் ந(க)ரமாகிப்போன மண்ணும்!

 

  இன்னிக்குன்னு வானத்துல ஏராளமா நட்சத்திரக் கூட்டம். அந்தக் கோடிக்கும், இன்னொரு கோடிக்கும் கண்ணாமூச்சி ஆடுற நட்சத்திரங்க அதுக்கு அப்புறம் காணாமப் போய்க்கிட்டு இருக்குதுங்க. ஒரு நட்சத்திரம் ஓடி ஒளிஞ்ச எடத்துலருந்து நூறு நட்சத்திரங்க மொளைக்குது. எங்க பாத்தாலும் என்னமோ மல்லிகைப் பூவத் தூவி விட்டது மாதிரி ஆகாயம் முழுசும் நட்சத்திரங்களே பரவிக் கெடந்திச்சு. இப்படி இதுங்களே எடத்தப் புடிச்சிகிட்டு இருந்தா, நெலா வந்து அங்க எப்படி உட்கார முடியும். தூரத்துல, நாய்ங்க விடாமக் கொலச்சிக்கிட்டு இருக்குதுங்க.


தேரும் தேவர்களும்

 

  அஞ்சி வயசு வரைக்கும் நான் பாத்துப் பழகின அதே மாதிரி தான் மாணிக்கம் மாமா இப்பவும் இருந்தாரு. அவர சுலபமா அடையாளம் தெரிஞ்சிக்கிடற விஷயம் ரெண்டு மூணு இருக்கு அந்த ரெண்டு மூணு விஷயங்களோடதான் மாணிக்கம் மாமா தானாமேராவிலர்ந்து புருவாஸ் வரைக்கும் போய் திரும்புகிற சித்தியவான் டிரன்ஸ் போர்ட் கம்பெனி பஸ்ல சன்னல் ஓரமா உக்காந்து வெளிய இருந்த காட்சிங்கள பாத்து ரசிச்சிகிட்டு இருந்தாரு. சரியா பதினஞ்சி வருஷம் இருக்கும். பொறங் கான் தோட்டத்த விட்டு