கதையாசிரியர் தொகுப்பு: கோ.ஒளிவண்ணன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

மீண்டு(ம்) வருவேன்…

 

  கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்று படுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட 7000 சதுர அடியில் விஸ்தாரமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் பங்களாவில் வாழ்ந்து வந்த எனக்கு 150 சதுர அடியிலிருந்த இந்த அறை தற்சமயம் மிகவும் பெரிதாக இருந்தது. நான் பிழைத்தெழுந்து மீண்டும் வாழப் போகிறேனா என்பதைத் தீர்மானிக்கப் போகின்ற இடம். இங்கு வந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. வேளாவேளைக்கு சுடுசோறும் குடிப்பதற்குப் பழச்சாறுகளும் கிடைக்கின்றன. மனித முகங்களைத் தொடர்ந்து நான்கு


மனம் குளிருதடி

 

  யாழினியின் அலைபேசி பைக்குள் அதிர்ந்தது. அதிர்வலைகள் வெளியேறி மேசையையும் கொஞ்சம் அதிரச் செய்தது. கிளையன்ட் மீட்டிங்கில் இருந்தாள். எடுக்காமல் எதிரிலிருந்தவரிடம் பேசிக்கண்டிருந்தாள். மீண்டும் அதிர்ந்தது. அதில் கவனம் செலுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தாள் அது நிற்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து அதிர்ந்து. எதிரில் இருந்த அவருக்குப் பதட்டம் கூடியது. ‘மிஸ். யாழினி முதல்ல அதை எடுங்க. தொடர்ந்து யாரோ கூப்பிடுறாங்கன்னா எமர்ஜன்ஸியா இருக்கும்’. எடுத்தாள். விடுதியிலிருந்து மீனா. குரலில் ஒரு அவசரம். பதட்டம். ‘நந்தினி சூசைட் அடெம்ப்ட்பா. விஜயா


விக்ரம்…

 

  நிலா தன் கைபேசியை வெறித்துப் பார்த்தாள். அழுகை அழுகையாக வந்தது. மீண்டும் அதனை எடுத்தாள். கால் அழைப்புகளில் அவன் பெயரைப் பார்த்தாள். விக்ரம் என்கிற அவன் பெயருக்குப் பதிலாக பட்டுக் குட்டி என்று பதிவு செய்து இருந்தாள். காதலித்த காலத்தில் தொடங்கி மணவாழ்க்கை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அவனைச் செல்லமாகப் பட்டுக் குட்டி என்றுதான் அழைப்பாள். கால் அழைப்பில் பார்த்தாள். அவர்கள் பேசியது வெறும் 10 நொடிகள். அழைப்பை முடிக்க எவ்வளவு அவசரம் காட்டினான்.


தழலினிலே…

 

  காலையிலிருந்தே களைக் கட்டியது மண்டபம். நழுவி விடுமோ என்ற அச்சத்தில் பட்டு வேட்டியை பிடித்து கொண்டு ஆண்களும், தழைய தழைய பதிய டிசைன் புடவைகளில் ஜோதிகாவாகவும் திரிட்ஷாவாக பெண்மணிகளும் பரபரப்புடன் இயங்கினர். இளம் பெண்கள் ஹன்சிகாவாகவும், சமந்தாவாகவும் வலம் வந்தனர். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி திரிந்தன. கொஞ்சம் வயதானவர்கள் ஆயாசமாக அமர்ந்து பழைய கதைகளை கதைத்துக் கொண்டிருக்கின்றனர். இளசுகள் குனிந்த தலை நிமிராது போனில் மூழ்கி அவ்வப்போது தலை தூக்கி ஓரக்கண்ணால் அழகா ஸ்மார்ட்


அபர்ணா…

 

  அதிகாலை நான்கு மணி. அழைப்பு மணி அலறியது. இரவில் தூங்குவதற்கு எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் சற்று ஆழ்ந்து தூங்கும் நேரம் இது. எரிச்சல் வந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்? ஒருவேளை பிரமையாகக் கூட இருக்கலாம். தொடர்ந்து தூங்கி விடலாமா என யோசிக்கும் போது மீண்டும் மணி அடித்தது. இம்முறை தொடர்ந்து இரண்டு மூன்று முறை அடித்து. அவசரம் என்று சொல்லியது. படுக்கையறையிலிருந்து வெளியேறி தாழ்வாரத்தில் நடந்து வரவேற்பறையைக் கடந்து வாசல் கதவை நோக்கிச் சென்றேன்.