கதையாசிரியர் தொகுப்பு: கோதண்டபானி நிரஞ்சலாதேவி

18 கதைகள் கிடைத்துள்ளன.

காதல்

 

 அணன்யா மனம் விரும்புதே உன்னை…. என்ற பாடலை முனுமுனுத்தப்படியே மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கும்,இனியனுக்கும் திருமணம் ஆகி ஒரு வாரமே ஆகிறது நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி குடியேறிய புது வீட்டில் இன்று சமையலையும் தொடங்கி விட்டாள் அவள்,என்னதான் வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து சமைத்து பழகியிருந்தாலும்,தனியாக சமைக்கும் போது கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது அவளுக்கு,முதல்முதலாக இன்று தான் அவள் சமையலை இனியன் சாப்பிடப்போகிறான்,அதுவே அவளுக்கு பரபரப்பாக இருந்தது இனியன் எழுந்து குளித்து சமையலறை பக்கம் வந்தான்.என்ன


பணம்

 

 அன்று திங்கட் கிழமை,பரமசிவம் தன் குடையுடன்,வள்ளி என்று குரல் கொடுத்தார்,சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தவளிடம்,நான் வயலுக்கு போகிறேன்,நேற்று யாரும் வேலைக்கு வரவில்லை,இன்னைக்கு வருவார்கள் நான் போனால் தான்,கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள்,இல்லையென்றால் கதைத்தே நேரத்தை ஓட்டிவிடுவார்கள்,பகல் சாப்பாட்டை நீ கொண்டு வா என்றவரிடம்,கொஞ்சம் பொறுங்கள்,நானும் வருகிறேன் எல்லா வேலையும் முடிந்துவிட்டது என்று குரல் கொடுத்த வள்ளி,அவசரமாகப் ஒரு பையில் அனைவருக்கும் பகல் உணவையும்,தண்ணியையும் போட்டு எடுத்து வைத்து விட்டு,அவளும் அவசரமாக மாற்றுத் துணியை மாற்றிக் கொண்டு,கதவைப்


திருப்பங்கள்

 

 அன்று யாமினி பிறந்த நாள்,அவளின் அப்பா,அம்மா,தங்கை நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் அவளின் கணவன் ஆதவன் இன்னும் வாழ்த்து கூறவில்லை,அவள் எதிர்பார்த்தது அதைமட்டும் தான் திருமணம் முடித்தப் பின்பு அவளின் முதல் பிறந்த நாள் இது,ஆவலுடன் எதிர்பார்த்தாள்.எப்படி மறந்தான் எனக்கு தெரியாமல் ஏதாவது செய்து அசத்தப்போறான் என்று நினைத்தாள்,வழமைப்போல் காலையில் வேலைக்குப் போய்,மாலையில் திரும்பி வந்தான் ஆதவன்,கையில் ஏதாவது இருக்கா?என்று பார்த்தாள் யாமினி,எதுவும் இல்லை முகம் வாடியது,அதை அவன் கவனிக்கவில்லை,இப்போது தான் எது தேவை என்றாலும்


திருநங்கை

 

 தயாளினி மரத்தடியில் உட்கார்ந்து இருந்தாள்,மரத்தில் இருந்த காக்கைகளின் சத்தம் எரிச்சலை ஏற்படுத்தியது அவளுக்கு,ஏன் தான் இந்த காக்கைகள் இப்படி கத்தி காதை புண்ணாக்கிறது என்று மனதில் நினைத்தவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்,கத்த சரி அதுகளுக்கு உரிமை இருக்கு,எனக்கு அப்படியா?வாயடைத்து உட்கார்ந்து இருக்கேன் என்று மனதில் தோன்றியது,அப்பா சௌந்தர்,அம்மா புவனா,தங்கை நளாயினி மத்தியில் தயாளன் என்று பிறந்து தற்போது தயாளினியாக உருவெடுத்து உட்கார்ந்து இருக்கேன்,கடவுளை குற்றம் சொல்வதா காலத்தை குற்றம் சொல்வதா,ஒன்னும் புரியாமல் இருக்கும் என்னை விட இந்த


உறவுகள்

 

 காலை வெயில் சுள் என்று அடித்தது,மீனாட்சி மெதுவாக எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள்.தலை முடியை சுருட்டி கொண்டை போட்டுக்கொண்டு மெதுவாக கீழே இறங்கி தன் கைத்தடியை எடுத்து ஊன்றியப்படி,வாசல்பக்கம் போய் வெளியில் கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள் மீனாட்சி.அமுதா பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு வந்தவள்,ஏன் அத்தை இவ்வளவு வெய்யிலில் உட்கார்ந்து இருக்கீங்கள்!தலை ஏதும் சுத்தப்போகுது என்றாள்.இல்லை ஆத்தா தலைக்கு கொஞ்சம் தண்ணி ஊத்திக்கலாமுனு பார்க்கிறேன்,வெயில் அடிக்குது என்றாள் மீனாட்சி,அதற்கு என்னா அத்தை காய்ந்த விறகு கிடக்குது,வெளியே அடுப்பை போட்டு


வரதட்சணை

 

 மாலை நேரம் இனியனும் மாளவிக்காவும் கடல்கறையோரத்தில் அமர்ந்திருந்தார்கள்.இருவர் மனதிலும் குழப்பம்,ஆயிரம் கேள்விகள்,ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை,சற்று நேரத்தில் இனியன் வாயை திறந்தான்,அன்று நம் வீட்டில் கேட்டதை,பெரிது படுத்திக் கொள்ளாதே என்றான் அவளுக்கு சுள் என்று தலைக்கு ஏறியது கோபம்,உங்கள் வீட்டில் எங்களை என்ன நினைத்தார்கள்?பணம் காய்க்கும் மரம் என்று நினைத்தார்களா?இவ்வளவு பணப் பேய்களாக இருக்கின்றார்கள் என்றாள்.இது கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் இனியனுக்கு வாயை மூடிக்கொண்டான். காரணம்


சிறை

 

 நாவரசு வரிசையில் தட்டுடன் நின்றான்,அவன் அந்த சிறைக்கு வந்து சில நாட்களே ஆகின்றது,அவர்கள் போடும் பழுப்பு நிறமான சாதமும்,ஊத்தும் குழம்பின் மணமும் அடிவயிற்றை பிரட்டும் அவனுக்கு,ஏதும் சொன்னால் பிறகு இந்த சாப்பாடும் கிடைக்காது என்பது அவனுக்கு தெரியும்,சத்தம் இல்லாமல் தட்டில் சாப்பாட்டை வாங்கிகொண்டு,வரிசையை தாண்டி வரும் போது,ஒரு சிலரின் குத்தலாக பேச்சி காதில் விழுந்தது,ஏய் மச்சான் அவன் ஒரு மாதிரியானஆளு,ஏதோ ரேப்பிங் கேஸாம் கவனம் என்று நக்கலாக சிரித்தார்கள்.நாவரசு அமைதியாக போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாதத்தை


சந்தர்ப்பம்

 

 பார்த்தீபன் அமைதியாக சோபாவில் சாய்ந்து இருந்தான்.அவனது தாய் அகிலா இன்னும் தூங்கவில்லையா?என்ற கேள்வியுடன் அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.இல்லை அம்மா,போய் படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது,சங்கவி நினைவாகவே இருக்கு என்றதும் அகிலாவிற்கு பொங்கியது கோபம்,அடக்கி கொண்டாள்.அடிப்பட்டு இருக்கும் அவனை மேலும் வார்த்தைகளால் காயப்படுத்த அவள் விரும்பவில்லை,அவன் தலையை அவளின் தோளில் சாய்த்துக்கொண்டாள் அகிலா இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் அவளை நினைத்துக் கொண்டிருப்ப,முடிந்தது முடிந்துவிட்டது. உன்னை வேண்டாம் என்று தூக்கிப் போட்டவளை இன்னும் ஏன் நினைத்துக் கொண்டிருக்க என்று


மகன்

 

 காலை பத்து மணி அம்மா..எனக்கு சாப்பிட என்ன இருக்கு? என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தான் மாதவன்,என்னடா இவ்வளவு லேட் ஆகி சாப்பிட்டால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? கொஞ்சம் நேரத்தோடு எழுந்தால்,அவசரம் இல்லாமல் சாப்பிட்டு வேலைக்கு போகலாம் தானே? ஒவ்வொரு நாளும் லேட் ஆகி போனால் உன்னை ஆபிஸில் யாரும் மதிக்க மாட்டார்கள் என்றாள் நீலவேணி.நீ காலையில் ஆரம்பிக்காதே,எனக்கு சாப்பாடு இருக்கா?இல்லையா? என்றான் மாதவன்.இருக்கு எடுத்து மேசை மீது வைத்திருக்கிறேன் சாப்பிட்டுப் போ என்றாள் நீலவேணி.வேகமாய் போய்


ஏமாற்றம்

 

 ஊர்மிளனும்,தர்ஷினியும் இருக்கமாகப் கைகளை கோர்த்துக்கொண்டு,தங்களையே மறந்து ஒரு ஒற்றையடிப் பாதையில் நடந்துக் கொண்டு இருந்தார்கள்,அவர்களுக்கு தேவைப்பட்டது தனிமை,எங்கே போகிறோம் என்று தெரியவில்லை,அந்தப் பாதையில் ஆள் நடமாற்றம் குறைவு,அந்த வயதில் அவர்களுக்கு அது தான் தேவைப்பட்டதும்,பதினாறு வயதுப் பருவப்பெண் தர்ஷினி,பத்தொன்பது வயது விடலைப் பையன் ஊர்மிளன்,இருவருக்கும் காதல்,அன்று சனி கிழமை இருவருக்கும் பாடசாலை இல்லை,பெற்றோர்கள் நம்பி பிள்ளைகளுக்கு பணம் செலவு செய்து,தனியார் வகுப்புகளுக்கு அனுப்பினால்,அதற்கு போகாமல் இப்படி காதல் என்று ஊர் சுற்றி திரியும் மாணவர்களில் ஊர்மிளனும்,தர்ஷினியும் ஒரு