கதையாசிரியர் தொகுப்பு: கோகுலக்கண்ணன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஜோஸலினின் உருமாற்றம்

 

  அமெரிக்காவில் ஹார்ட்ஃபோர்ட் நகர மையத்தில் இருக்கும் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் குடியேறியபோதுதான் ஜோஸலினைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே அவளைப் போன்ற அழகி உலகில் இருக்க முடியாது என்ற நிச்சயம் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக அவள் உதடுகள். அவளை முத்தமிடக் கொடுத்துவைத்தவன் அதிர்ஷ்டசாலி. மெல்லிய புன்னகையுடன் அப்பார்ட்மெண்டை எனக்கு வாடகைக்குத் தருவதில் உள்ள சிக்கல்களை எடுத்துச் சொன்னாள். நான் அமெரிக்கா வந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. இந்தக் கட்டட வாசலில் கீழிறங்கிப் போகும் அசைலம் அவென்யுவில் இரண்டு ப்ளாக்குகள் தொலைவில்


நடுக்கம்

 

  நீல நிறத்தில் தங்க கீற்றுகளுடன் சற்று பொிதான எழுத்துக்களை கொண்ட அந்த அழைப்பிதழ் அட்டையின் மத்தியில் ‘கண்டேனடி ஆசைமுகம் ‘ என்ற தலைப்பும், அதன் கீழ், ஜீவா-மேகலா என்றிருந்தது. அதனடியில் சாய்ந்திருந்த எழுத்துகளில் ‘இளம் உள்ளங்களின் காதல் கவிதையை செலுலாய்டில் செதுக்கியிருப்பது ஜிகே ‘. தியேட்டர் விபரமும்,தேதியும், நேரமும் பக்கத்தில். ஜிகேயின் உதவியாளன் நேற்று வந்து கொடுத்துப் போனது. இன்னும் ஒரு மணிநேரத்தில் என்று கைக்கடிகாரத்தை பார்த்தார். போவதா வேண்டாமா என்று ஒரு சில கணங்கள்


முகங்களை விற்றவன்

 

  அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை எல்லோரும் கடக்கும்பொழுது அவன் தரையில் விாித்து வைத்திருந்த முகங்களை அருகில் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் இருந்தும் அதை வெளிக்காட்டாது ஓரக்கண்ணால் பார்த்தவாறு நகர்ந்தார்கள். அவர்களின் கவனத்தை இழுக்கும் படியாய் அம்முச்சந்தியில் விதவித அங்காடிகளும், கண்ணைப் பறிக்கும் படியான பொருட்களும் இருந்தன. அக்கடைக்காரர்கள் அலங்காரமாய் எல்லோரையும் ஈர்க்கும்படி பேசவும் செய்தார்கள். அங்கே குலுக்கல் முறை பாிசுகளும்


இழப்பு

 

  வலி அவ்வப்போது ப்ரக்ஞையின் முழுமையையும் சிறைப்படுத்தியது. அந்தக்கணத்தில் புற உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டாள். பெருகி வரும் ஒவ்வொரு வலியலையும் புற உலகத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவளை விசிறி அடித்தது. அங்கிருந்து மீண்டு மீண்டு வருவது ஆயாசமான தன்னிச்சை செயலாயிற்று. அவளால் தாங்கமுடியாதபடி இருந்தது வலியின் மூர்க்கம். பெரிய அரக்கனின் அகண்ட கைக்குள் நசுக்கப்படுவதை போலுணர்ந்தாள். வலியின் உக்கிரம் அதிகரிக்க, காலம் நகராமல் நின்றுபோய் விடுவது போல் இருந்தது. அந்த சில கணங்களில் எல்லாம் அழிந்து போய்,


ரேடியோ

 

  நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை முட்டியால் உந்தித் தள்ள வேண்டிய தூரம் கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது. தள்ளிய கோலி என் எரிச்சலைப் பொருட்படுத்தாமல் குழியின் திசைக்குக் கோணலாய் எங்கோ போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் அப்பா என்னைக் கூப்பிட்டார், வீட்டு வாசலில் நின்றபடி. அவர் பார்க்கும் தூரத்திலிருந்து கோலி கண்ணில் படுவது கஷ்டம். கோலி விளையாடுவதைப் பார்த்துவிட்டால் தீர்ந்தேன் நான். அவசரமாய்