கதையாசிரியர் தொகுப்பு: கோகிலா மகேந்திரன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

மனதையே கழுவி

 

 சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவிட்ட ஒரு காலைப் பொழுதில், நான் அந்தப் பிரபல கல்லுாரியின் அதிபர் அறையினுள் (குளிர்ந்த வாடைபோல் – மன்னிக்கவும் – தவறுதான்) நுழைந்தேன். எனக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத் தான் செய்தது. அதிபர் கதிரையைக் காட்டிச் சிரிக்க நானும் பெருமையுடன் அமர்ந்து கொண்டேன். “என்ன விஷயம்?” “இல்லை… ஒரு சின்ன விஷயந்தான் …. மாவிட்டபுரத்திலை இருந்து இடம் பெயர்ந்த ஒரு பிள்ளை ….. சரியான கஷ்டம். நான் ஒரு கவுன்சிலர்


வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம்

 

 முந்தின விடுமுறை நாளின் மகிழ்வை நினைத்து ஏங்கி, மறு நாள் பிறந்தும் விடுபடாத துயரில் மூழ்க்கிக் கிடக்கும் இந்தத் திங்கட்கிழமை, பல சமயங்களில் இவளுக்கு வெகு துயரம் மிக்கதாய் இருந்திருக்கிறது. அவற்றைப் போலில்லாமல் இந்தத் திங்கட்கிழமை மாலை உற்சாகம் நிறைந்ததாய்த் தொடங்கியிருப்பது போலவே, உற்சாகம் நிறைந்து முடியவேண்டும் என்று அவள் மனதார விரும்பினாள். இறைவனை வேண்டினாள். இலை துளிர் காலத்து அறிகுறியாய் மைதானத்தைச் சுற்றியிருந்த பெரு மரங்கள் யாவும் பூத்து நிறைந்திருந்தன. அருகே நிற்பவர்களை மணம் வீசி


மனிதம் மதலைகளிடம் மட்டும்

 

 மரணத்தின் நிறமாய்க் கனக்கும் இருளில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு படுத்துக் கிடந்தது அந்தக் கட்டை. தன்மீது தனக்கே ஏற்பட்டிருக்கும் சுயவெறுப்பைச் சுய மோகமாய் மாற்ற எவ்வளவோ முயன்றும் முடியாமற் போன தோல்வி மரணக் களையாய் முகத்தில் அப்பிக் கிடந்தது. எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படிப்பித்து நல்ல நிலைக்கு ஆளாக்கிய பிள்ளைகள் ஒருவரும் அருகில் இல்லாததால் தகிக்கும் தனிமை, தனிமையால் ஏற்பட்ட மூன்று வருடகால வெறுமை, வெறுமையில் வெதும்பி வந்த சுயவெறுப்பு ! காற்று, வெயில், மழை, குளிர் எதுவும்


உள்ளத்தால் அடிமைகள்

 

 என்னை நிழலாகத் தொடர்ந்த துன்பத்தை விரட்டியடிப்பதற் காகவோ, மறப்பதற்காகவோ அல்லது மடியச் செய்து வெற்றி கொள் வதற்காகவோ தான் இத்தனை வருடமும் நான் உற்சாகத்துடன் போராடி வந்தேன். அந்த நிழல் போராட்டம் தோற்றுப் போய்விட்டது. நிழல் போராட்டங்கள் எப்போதுமே தோல்வியில் தான் முடிவடைந்திருக் கின்றன. அந்தச் சரித்திர நிர்ப்பந்தத்திற்கு விதிவிலக்காக முயன்று தோற்றுப்போய் இப்போது நானும் அந்தச் சரித்திர அடிமைகளில் ஒருத்தியாய்… இல்லை ! அப்படி ஆகிவிடக் கூடாது! மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று எமது பெண்கள்


ஒலி

 

 ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ கண்ணன் சொன்னானாம்! தேவர்களுக்கு ஆறு மாதம் பகற்காலம், ஆறுமாதம் இராக்காலமாம்!- தேவர்களுக்கென்ன, துருவ வாசிகளுக்கும் அப்படித்தான்! வெள்ளிக்கோளில் இவர் போய் வசித்தால், இவருக்கும் நூற்றுப்பன்னிரண்டு நாள் இரவும், நூற்றுப்பன்னிரண்டு நாள் பகலுமாய் இருக்கும். இதென்ன பெரிய அதிசயமே? – அந்த ஆறுமாத இரவு முடிந்து விடியும் காலம் மார்கழியாம்! அதனால் அது சிறப்பான மாதமாம்! கண்ணனுக்கு மனச்சந்தோஷமாக இருக்கட்டும்! இவருக்கு இந்த மாதம் முழுதுமே ‘ரென்சனாக’ இருந்தது! உயரமும் அமைதியான கண்களுமாய்


சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை

 

 மல்லிகா என்னும் ஆட்டுக் குட்டி! விடியும் நேரத்திற்கு எப்போதுமே ஒரு தனி அழகு உண்டு! அதிலும் தமிழினத்தின் முப்பது வருட நீண்ட போராட்டத்தின் முடிவில், உள்ளே குமையும் ஊமைத் துன்பங்களையெல்லாம் விழுங்கிவிட்டு, அதற்கு மேலே எழுகின்ற புதிய தைப்பொங்கல் விடியற்காலை அபார அழகைத் தந்து கொண்டிருந்தது. துக்கமோ மகிழ்வோ அல்லது இரண்டுமே சேர்ந்தோ ஒரு உரமான உணர்வு நெஞ்சைக் கவ்வி அடைக்க, அந்த அழகைத் தரிசித்தபடியே கண் விழித்தாள் தங்கராணி. மல்லிகா என்னும் ஆட்டுக்குட்டி முருக்கங்குழையும், பசுஞ்


மரணிப்பிலும் உயிர்க்கும்

 

 அந்த இரவு ………. இதயப் பரப்பில் துயரக் கருமுகில் கவிந்து மூடியது! கண் விழித்தேன்! துக்கம் வரண்ட துயர் இரவு! நேரம் சென்று உதித்த நிலவு முக்கால் வட்டத்திலிருந்து அழுது கொண்டிருப்பது யன்னலுாடே தெரிந்தது. கனவின் பயங்கரம் இன்னும் மனதை விட்டகலவில்லை. அந்தச் சிவப்பு நிறக் ஹெலிகாப்டர் இன்னும் எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறப்பதும் திடீரெனத் தாழ்ந்து குண்டு போட்டு நிமிர்வதும் போல……….. அது கனவுதான் என்று அமைதியடைய இதயம் அடம்பிடித்து மறுக்க, அதனுடன் அறிவு


பிறழும் நெறிகள்

 

 அவர்கள் அவனைப் பார்த்த பார்வைகள் இன்னும் அவனது உடம்பில் ஈக்களாயும் எறும்புகளாயும் மொய்த்துக் கிடந்தன. அப்படி என்னதான் விசித்திரமாய்ப் பார்க்கிறார்கள்? அவனது வகுப்பிலே ஸ்ரீதரனைப் பிரின்சிப்பலுக்குத் தெரியும். அவன் ஒவ்வொரு தவணையும் எப்படியோ முதலாம் பிள்ளையாக வந்து விடுகிறான். இவ்வளவு பாடங்களையும் வரி தவறாமல் நினைவில் வைத்துக் கொள்கிறான். தவணை முடிவில் நடக்கும் அசெம்பிளியில்’ மேடையில் ஏறிப் பிரின்சிப்பலிடம் ‘றிப்போர்ட்’ வாங்குகிறான். எல்லோரும் கை தட்டுவார்கள். இவன் மட்டும் தட்ட மாட்டான். “சரியான சப்பல் கட்டை அவனை