கதையாசிரியர் தொகுப்பு: கே.வி.ஜெயஸ்ரீ

1 கதை கிடைத்துள்ளன.

ஒரு நாளுக்கான வேலை!

 

  செல்வி ஆனி வர்க்கி, ஹோம் நர்ஸ், மைலாடும் குன்று வீடு, குருவாயூர் (அஞ்சல்). அன்பான ஆனி, என் விளம்பரம் தொடர்பாகத் தாங்கள் தகவல் கேட்டு அனுப்பிய கடிதத்துக்கு நன்றி. வேலையைப் பொறுத்து கீழ்க்காணும் விவரங்களைத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன். எர்ணாகுளம் வைட்டிலயில் ‘ஹெவன்ஸ் கிஃப்ட்’ அபார்ட்மென்டின் 702ம் எண் பிளாட்டில்தான் நாங்கள் (இப்போது எங்களுடைய அம்மா மட்டும்) வசிக்கிறோம். நானும் என் மனைவியும் பத்து வருடங்களாக டெஹ்ரானில் இருக்கிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். நிஷா… ஒன்பது வயது.