கதையாசிரியர் தொகுப்பு: கே.பி.ஜனார்த்தனன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்று கண்கள் !

 

  மாலினிக்கு, கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர்? சந்தேகமே இல்லை… நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம், ஆண்களுக்கு மட்டும் தான். கணினியின் வெண்திரையில், லதிகாவின், “இ-மெயில்’ அவளைப் பதில் கேட்டது. “பாருடீ… ஒன்ஸ் இன் எ லைப் டைம் ஆப்பர்சூனிட்டி… பத்மாவிலிருந்து, சரளா வரை, ஒவ்வொருத்தர் அட்ரசும் கண்டுபிடிக்க நான் பட்டபாடு… இருபது வருஷத் துக்கப்புறம், நாம எல்லாரும் ஒண்ணா


அவள் ஒரு பெண்!

 

  என் எத்தனையோ கதைகளில் ஏதாவது ஒரு கேரக்டர் கையில் ஒரு தந்தியை வைத்துக்கொண்டு தவித்து நிற்பதைப் பத்திபத்தியாக விவரித்திருக்கிறேன். ஆனால், இப்போது நானே ஒரு சேதியை வைத்துக்கொண்டு தவித்த தவிப்பைப் பார்க்கும்போது, இதில் பாதியையாவது என் கேரக்டர்கள் அனுபவித்திருப்-பார்களா என்று தோன்றியது. கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த ராஜேஸ்வரியைப் பார்த்தேன். மயக்கம் இன்னும் தெளியவில்லை. உலுக்கி எடுத்திருந்தது இருமல். கால் அடிக்கு ஏறி இறங்கியது நெஞ்சு. மூச்சில் இன்னும் கரகர சத்தம். அவள் விழிப்பதற்குள் நான் ஒரு முடிவுக்கு


உண்மைக்கு நூறு புனைபெயர்கள்!

 

  ஜெகனுக்கு குபுக்கென்று ஆத்திரம் பொங்கியது. சட்டென்று சூடாயிற்று உடம்பு. பிடித்திருந்த மவுஸ், தன் மைதானத்திலிருந்து கீழே விழுந்தது. எண்ணை அழுத்தி, சபேஷை செல்லில் பிடித்தான். சபேஷின் குரலில் உற்சாகம் கொட்டிற்று, ”மெயில் பார்த்தியா? சந்தோஷம் பேயா அறைஞ்சிருக்குமே? ரொம்ப நாளா நீ குறிவெச்ச போஸ்டிங் ஆச்சே… கிடைக்கப்போகுதுன்னா சும்மாவா?” ”அந்த சந்தோஷத்தைதான் உன் பின்குறிப்பு அடிச்சுப் போட்டுடுச்சே!” ”ஓ… அந்த ஷேர் விஷயத்தைச் சொல்றியா?” ”ஆமா..!” ஜெகனின் பல் நறநறத்ததையும் சிக்னல் டவர் சிரத்தையாக வாங்கி,


‘பின்’ குறிப்பு!

 

  அன்புள்ள அத்தானுக்கு, உங்கள் மனைவி மீனாட்சி எழுதிக்கொண்டது. நான் நலம். நீங்கள் நலமா? இங்கே நான் என் பிறந்த வீட்டுக்கு வந்து இன்றோடு நாற்பது நாளாகிறது. இதுவரை உங்களிடமிருந்து ஒரு போன்கால் கூட வரவில்லை. ‘எப்படி இருக்கிறாய் மீனு?’ என்று விசாரித்து ஒரு கடிதம் கூட நீங்கள் எழுதவில்லை. எப்படி எழுதுவீர்கள்? எங்கள் அப்பா, அம்மா செய்ததென்ன மன்னிக்கக்கூடிய குற்றமா? ‘என் மகனுக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது. 12,000 ரூபாயிலிருந்து ஒரே ஜம்ப்பில் 20,000 ரூபாயாக சம்பளம்


ஜெயா, நீ ஜெயிச்சுட்டே!

 

  அமர்க்களப்பட்டுக்கொண்டு இருந்தது மேடை. வருடா வருடம் நடக்கும் கலை விழா. நாலு வருட மாணவர்களும் சேர்ந்து அரங்கத்தை அதிரவைத்தார்கள். பாட்டுப் போட்டி முடிந்ததும், ‘‘நந்தகுமார், கலைவாணி,ஹரீஷ், ப்ரபா,மிருதுளா,ஒப்பிலியப்பன் எல்லோருமே இசைக்கு இனிப்பு தடவி காதுக்கு விருந்தளித்தனர். அனைத்துமே குறை சொல்ல முடியாத நட்சத்திரப் பாடல்கள். ஆனால்…’’ என்று சற்றே நிறுத்திய நடுவர், ‘‘இந்த நட்சத்திரங்களின் நடுவே ஜொலிக்கும் பௌர்ணமி, விஷ்வாவின் பாடல்தான்!’’ என்று முடிக்க… கைத்தட்டலும், விசில் சத்தமும் அரங்கத்தின் கூரையைப் பிளந்தன. நண்பர்களின் தோளில்