கதையாசிரியர் தொகுப்பு: கே.பாலமுருகன்

14 கதைகள் கிடைத்துள்ளன.

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது

 

  காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து பரவவிடும் தகரங்கள், பாதி நீரை நிரப்பிக்கொண்டு பல நாட்களாக இடைச்சட்டத்திலேயே உட்காந்திருக்கும் குவளை, என அனைத்தையும் வெகுநேரம் பார்த்திருக்க முடியவில்லை. எல்லாமும் காலத்தை உறிஞ்சி தனக்குள் நகரவிடாமல் தடுத்து வைத்துக்கொள்கின்றன. இன்று இந்த வீட்டைக் காலி செய்தாக வேண்டும். தரையில் நான் படுத்திருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தள்ளி சன்னல். கதவு திறந்தபடியிருக்க வெளியில்


சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

 

  1. தவிப்பெனும் கடல் நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும். இருளில் சொற்கள் கரைந்துகொண்டிருக்கும் உணர்வைப் பெற முடியும். மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த சிட்டுக்குருவியின் படப்படப்பு மட்டும் அதீத ஓசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து ஓடிவந்த முதல் நடுநிசி அது. நகரம் செத்து அநேகமாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கக்கூடும். “செவன் இலவன் எங்காது இருக்குமா?” எதிரில் யாரும் இல்லை. கேட்டு


இறந்த காலத்தின் ஓசைகள்

 

  1 நான் பேசுகிறேன் “சன்னாசி! சன்னாசி! வௌங் குதா இல்லயா? அந்தக் கதவ சாத்துடி. கண்ணு கூசுது. தொறந்து போட்டினா அப் படியே போயிருவியே. அத சாத்தி வைப் போம்னு யோசன இருக்காதுடி ஒனக்கு” “சன்னாசி! சன்னாசி! எங்க போயி தொலைஞ்சிட்டா? பெரிய பங்களாலெ இருக்கற மாதிரிதான். எங்க கொள்ளப் பக்கம் போயிட்டியா? இந்தக் கதவ சாத்துடி வெளிச்சம் இப்படி அடிக்குது” பிளாஸ்டிக் கயிற்று நாற்காலி அவ்வளவு இதமாக இல்லைதான். கால் களை நீட்டிக் கொள்ள


என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

 

  பூச்சாண்டி பேசுகிறது அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும். ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட அசரீரிகள் தனது ஒவ்வொரு குரலாக அறையின் வெற்றிடங்கள்தோறும் எறிந்து கொண்டிருக்கிறார்கள். “உன் கை காலு சுருங்கி நீ குள்ள பிசாசு போல ஆயிடுவே” “உன்னோட கண்ணுலாம் சிவந்து முகம் கறுத்து நீ கொள்ளிவாய் பிசாசு போல பூச்சி போல கெடப்பெ” “நீ ரத்தம் குடிச்சி, உன் வயிறு உப்பி, வெடிச்சி நீ பூச்சாண்டியா ஆயிடுவே” அசரீரிகளின் குரல்கள் எனக்கு சாதகமாகவும் முரணாகவும்