கதையாசிரியர் தொகுப்பு: கே.தியாகராஜன்

1 கதை கிடைத்துள்ளன.

விருப்பமுள்ள திருப்பங்கள்!

 

  ”கெட்டிமேளம்… கெட்டிமேளம்..!” நாகஸ்வரமும் மேளமும் இணைந்து குதூகலிக்க, அட்சதை மழை பொழிய… ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்டினான் மணமகன். திருமண மண்டபம் முழுக்கச் சுற்றமும் நட்பும் கூடிக் குலாவிக்கொண்டு இருந்தது. ”கடமையை முடிச்சிட்டோம்ல… மல்லிகா” தன் பக்கத்தில் பூரிப்புடன் நின்றுகொண்டு இருந்த தன் மனைவியிடம் கேட்டார் பரமசிவம். அவரின் கையை அழுத்தினாள் மல்லிகா. அந்த அழுத்தத்தில் இருந்தது ஓராயிரம் வார்த்தைகளின் திருவிழா! கண்களின் கடைக்கோடியில் திரண்ட கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடியே பரமசிவம் மணமேடையில் இருந்து இறங்கி,