Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: குலசேகரன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஒளிந்து கண்டுபிடிக்கும் விளையாட்டு

 

  அவர்கள் இறுதிப் பரீட்சை எழுதிய மையமான பெரிய பள்ளியின் தாழ்வாரம் காலியாயிருந்தது. அதில் கோபியும் கலைவாணியும் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவள் அகப்படாமல் முன்னால் ஓடிக்கொண்டிருந்தாள். அவன் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். அவளைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேகமாகப் பாய்ந்து கடைசியில் அவளுடைய கையைப் பிடித்தான். அது இளங்குருத்தைப் போல் சில்லென்றும் சிறுத்துமிருந்ததை முதன்முறை முழுமையாக உணர்ந்தான். அவள் கையை உருவிக்கொண்டு மீண்டும் தப்பிக்க முயற் சித்தாள். கண்ணாடி வளையல்கள் உடைந்து சிதறிவிடுபவை போல் குலுங்கின.


அழிக்கவியலாத கறை

 

  என் கண்கள் அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் படுக்கையின் மேல் நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தேன். ஊரடங்கி நள்ளிரவாகியும் அவள் உள்ளே வரவில்லை. இருள் வேகமாகக் கரைந்து எங்கும் வெளிச்சம் பரவி விடிந்துவிடும்போலத் தோன்றியது. நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முதலிரவு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. நீரோடையின் சலசலப்பைப் போல வெளியிலிருந்து அர்த்தம் புரியாத பேச்சுக் குரல்கள் காதில் விழுந்துகொண்டிருந்தன. அவளுடைய உறவினர்கள் என்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏதாவது காரணங்களைச் சொல்லி அவளைத் தடுத்து நிறுத்தவோ


அவரவருக்குச் சொந்தமான நிலம்

 

  அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த தெருக்களின் வழியாக நடந்தார். குட்டையான கோபுரத்தில் சுண்ணாம்புச் சிற்பங்கள் சிதைந்து மூளியாக நிற்கும் பழைய மாரியம்மன் கோயிலையும் கடந்து ஆற்றை நெருங்கினார். நிறைய மரங்கள் வெட்டப்பட்ட கரை வெறுமையாக நீண்டிருந்தது. பழைய ஞாபகங்ளோடு ஆற்றில் முகத்தைக் குனிந்து பார்ப்பதுபோல் எஞ்சியிருந்த சில மரங்கள் கவிந்து நின்றிருந்தன. ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் ஆற்றில் இறங்கினார். எங்கும்


அருகில் வந்த கடல்

 

  அவன் சுற்றுலாப் பயணங்களின் போதுதான் கண்ணெட்டும் தூரம்வரை விரிந்திருக்கும் பெரும் கடலைக் கண்டிருக்கிறான். ஆளற்ற கடற்கரையில் ஒருமுறை நண்பர்களோடு அலைகளில் புரண்டு திளைத்திருக்கிறான். அவன் வசிக்கும் சிறு நகரம் கடலிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளி உள்ளே ஒளிந்திருக்கிறது. அங்கு வாழ்பவர்களுக்கும் கடலுக்கும் இதுவரையிலும் எந்தத் தொடர்பும் இல்லை. விடுமுறை நாளான அன்று மாலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையன் ஆச்சரியத்தில் கூவினான். அச்சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிலிருந்து ஓடிவந்த மற்றவர்களுக்கும் முதலில் என்னவென்று தெரிந்திருக்க வில்லை. தொலைக்காட்சியிலும்


திரும்பிச் செல்லும் வழி

 

  பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார். சுற்றியிருந்தவற்றை அடையாளம் காண முடியாதபடி இருள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்தது. பிறந்து வளர்ந்த ஊரில் தனக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீட்டுக்குள் மரக்கட்டிலின் மேல் மல்லாந்து படுத்திருப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது. கண்கள் இருட்டுக்குப் பழகியதும் ஆளுயரத்துக்கு மேலிருந்த திறந்த சாளரத்திலிருந்து புகை போல் மங்கிய வெளிச்சம் புலப்பட்டது. எங்கும் தெளிவான அமைதி நிலவியது. அவருடைய மகன் நகரத்தின் ஓரத்தில்