கதையாசிரியர் தொகுப்பு: குப்பிழான் ஐ.சண்முகன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

உணர்ச்சிகள்

 

 அவனருகிலிருந்த அவளை. அவன் வலு குறுகுறுப்பாகப் பார்த்தான். அவளின் அண்மை அவனை என்னவோ செய்தது. அவளிலிருந்து வீசிய ‘சென்றி’ன் நறுமணத்தை அவன் நுகர்ந்தான். அவளின் சேலைத் தலைப்பின் தழுவலில் அவன் சுகமனுபவித்தான். அவளை எங்கோ கண்டதுபோல அவனுக்கு ஞாப கம் வந்தது. அவளை உற்றுப் பார்த்துக்கொண்டே அவளை எங்கே கண்டிருப்பேனென யோசித்தான். அவளின் மெல்லிய நீலநிறச் சேலையை யும், கருநிறப் பாம்பாக நீண்ட ஒற்றைப் பின்னலையும், அதன் தொடக்கத்தில் சிரிக்கும் வெள்ளை முல்லை மலர்களையும், அவன் பார்த்தான்.


‘மோனலிசாப்’ புன்னகை

 

 ‘எங்கள் தகப்பனாருக்கு மிகவும் விருப்பமான ஐயனார் கோவிலுக்கு இன்று போகக் கிடைத்தது. இந்த ஐயனார் கோயிலைப் பற்றியும், அதன் பின் கோபுரத்தோடு வேர்விட்டு வளர்ந்து, பல விழுதுகளை ஊன்றி நிற்கும் பெரிய ஆலமரத்தைப் பற்றியும், அதனயலில் மாரிகாலத்தில் பொங்கித் ததும்பி எப்போதும் வற்றாத குளத்தைப் பற்றியும், கோவிலின் மிக மிக ஆழமான தீர்த்தக் கிணறு பற்றியும், நாங்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் எங்கள் தந்தையார் கதைகதையாகச் சொல்வார்.’ ‘ஐயனார் கோவில் பிரதேசம் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டதென்று


தடங்கள்

 

 வானம் கறுத்து இருண்டிருந்தது. காற்றுப்பலமா கச்சுற்றிச் சுழன்று அடித்தது. நீலக்கடலலைகள் மடிந்து வெண்ணுரை கக்கி கரையில் மோதித் திரும்பின. அவனும், நந்தகுமாரும், பொன்னுத்துரையும் கடற்கரைத் தாழை மரமொன்றின் நிலம் நோக்கிச் சாய்ந்த கிளையில் அமர்ந்திருந்தனர். அவன் ஏதோ நினைவில் மனத்தைப் பறிகொடுத்த இலயிப்பில், மனத்தில் அடங்காது கட்டுமீறிக் கொப்பளிக்கும் குதூ கலத்தில், வார்த்தைகளில் சிறைப்பிடிக்க முடியாத அந்த உணர்ச்சிகளின் சுகானுபவத்தில் மூழ்கி ஏதேதோ இராகக் கோலங்களை மனத்துள் வரைந்து – அவற்றுக்கு ஒலி அர்த்தம் கொடுக்கும் முனைப்பில்