Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: குந்தவை வந்தியத்தேவன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

கதைசொல்லி

 

  “இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?” ரவி தன் மனைவியிடம் கேட்க. அவள், “இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான் பாத்திருக்கேன். நார்த் இண்டியா பக்கமெல்லாம் போனதில்லை.” என்று பதிலளித்தாள். ரவி ஒரு மென்பொருளியல் வல்லுநன், அமெரிக்காவில் கடந்த நான்காண்டுகாலமாக, ஒரு தலைசிறந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். மிகவும் அமைதியானவன், அவ்வளவு சீக்கிரத்தில் யாருடனும் பழகிவிடமாட்டான், எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து முடிவு எடுப்பவன் எனவும் நட்பு வட்டாரங்களில் பெயரெடுத்திருந்தான். அவன் தாய் தந்தை முடிவுசெய்து


நீங்களே சொல்லுங்க சார்!!!

 

  வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல என் பக்கத்தில் உட்கார்ந்து வர்றாலே என் பொண்டாட்டி இவளைப் பத்தித்தான் சார் சொல்றேன். கல்யாணம் ஆகி ஒரு ஆறுமாசம் ஆகியிருக்கும் சார். அப்பப்ப சண்டை போட்டுக்குவம்னாலும் இரண்டு நாளெல்லாம் பேசாமயிருந்ததில்லை சார். அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்னு கேட்டு சொல்லுங்க சார். ஒண்ணுமில்ல சார், இரண்டு நாளைக்கு முன்னாடி நாங்க இரண்டுபேரும் வேலை பார்க்கிற


சொர்க்கவாசல் கதவு

 

  “திருச்சியில குஷ்புக்கு கோயில் கட்டுனாங்கல்ல, அதை அறநிலையத்துறையில சேர்க்கணும்னு பெரிய போராட்டம் நடந்தது தெரியுமா?” வீட்டுக்கு வந்திருந்த நண்பரிடம் சின்நைனா கேட்டுக்கொண்டிருந்தார். எதையோ பிடிக்க வீசிய தூண்டிலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது. இதே வேறொரு சமயமாயிருந்திருந்தால் மறுத்துக் கூட பேசியிருப்பேன். ஆனால் அது சரியான நேரமும் கிடையாது, சரியான இடமும் கிடையாது. இருவருக்கும் போதை தலைக்கேறத் தொடங்கிய நேரம் அது. வாழ்க்கையிலே போதை என்னை போதை எப்போதுமே விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. பேச்சின் பாதையை மாற்ற