கதையாசிரியர் தொகுப்பு: குகப்பிரியை

1 கதை கிடைத்துள்ளன.

பச்சை மோதிரம்

 

  1 ”அடா டா டா! என்ன மழை, என்ன மழை! சுத்தமாய்த் தள்ளவே இல்லை; வீடு பூராவும் ஒரே அழுக்கு! என்ன இடி இடிக்கிறது! ஐப்பசி மாதம் அடை மழை என்பார்களே, சரியாய்த்தான் இருக்கிறது. குழந்தைகள் துணிமணி ஒன்றுகூட உலரவில்லை. புடவை ஒரே தெப்பல். இந்தப் புடவைகளே உலரமாட்டேனென்கின்றன. இன்னும் கதர் வேண்டுமாம். கதர்! தூலம் தூலமாய் இரட்டையும் ஜமக்காளத்தையும் வாங்கினால் யாரால் தூக்கி உடுத்த முடியும்? சொல்லப் போனால் பொல்லாப்பு. நான் கதர் உடுத்திக்கொள்ளவில்லையென்னுதான்