Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: கி.வா.ஜகந்நாதன்

38 கதைகள் கிடைத்துள்ளன.

மூங்கிலிலை மேலே

 

 மாலை வேளை. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் மாலையில் வீசும் தண்ணிய தென்றலின் இனிமை யையும், அந்தி வானத்தின் அழகையும், இயற்கைத் தேவி தன்னுடைய குழந்தைகளுக்கு ஓய்வு கொடுத்துத் தாலாட்டும் கங்குற் கன்னியை வரவேற்கும் கோலத் தையும் பார்த்து மகிழப் புறப்பட்டார். வயலோரங் களில் சோலை படர்ந்த நிலப்பரப்பிலே தம்முடைய கண் பார்வையை விரியவிட்டுப் பார்த்துக்கொண்டே சென்றார். அவர் காதில் கணீரென்று ஒரு தமிழ்ப் பாட்டு விழுந்தது. வயல் பக்கத்திலிருந்து வந்த அந்த இன் னோசையைத் தொடர்ந்து அங்கே


தேவரும் குருவும்

 

 “சிருங்கார ரசம் இருந்தால்தான் காவியம் சோபிக் கும்”என்றார் ஒரு புலவர். “வடமொழியில் எவ்வளவோ காவியங்கள் இருக் கின்றன. தமிழில் இல்லை. சில காவியங்கள் இருந்தா லும் நன்றாக அமையவில்லை” என்றார் அவருடைய அருகில் இருந்த மற்றொரு புலவர். “நல்ல கவிஞர்கள் தமிழில் இல்லையா? ஏன் புதிய காவியங்களைப் பாடக் கூடாது?” “புலவர்கள் இல்லாமல் என்ன? இப்பொழுது நம்முடன் பழகும் திருத்தக்க தேவர் நல்ல வாக்கு வன்மையுடையவர். சிறந்த புலவர். அவர் எதையும் பாடலாம்.” “போயும் போயும் ஒரு


நிர்வாண தேசம்

 

 [ குறிப்பு;-சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் ஒரு பெரிய நகரமாக இருந்தது. அங்கே கரிகாலன் காலத்தில் கப்பல் வியாபாரம் எவ்வளவோ சிறப்பாக நடந்துவந்த தாம்.கலங்கரை விளக்கம்,சுங்கமண்டபம் முதலிய இடங்கள் அங்கே இருந்தனவாம். இப்போது உள்ள காவிரிப் பூம்பட்டினத்தில் மீன்படகையும் வலைஞர் குடிசைகளையுமே பார்க்க முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப் பட்டினம் இருந்த நிலைமையைப்பற்றிச் சங்க காலத்துத் தமிழ் நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.அந் நகரத்தில் இருந்த ஒரு வணிகனைப்பற்றி “மணிமேகலை ” என்னும் காவியத்தில் கண்ட வரலாறு ஒன்று


குடிப் பெருமை

 

 சோழன் நலங்கிள்ளி பெரிய போர் வீரன். சோழ நாட்டின் ஒரு பகுதியை அவன் ஆண்டு வந்தான். அவனுடைய தம்பி மாவளத்தான்;நல்ல சால்புணர்ச்சி மிகுந்தவன்;புலவர்களிடத்தில் பேரன்பு பூண்டவன். வீரமும் ஈகையும் அவன் குலத்துக்கே சொந்தமாக இருக்கும்போது அவனிடமும் இருந்தன என்று சொல்லவேண்டுமா, என்ன? தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் மாவளத்தானுடைய நட்புக்குப் பாத்திரமானவர்;அந்தணர். தமிழ் இன்பத்தைத் தேக்கும் உள்ளத்தையும் தமிழ்ச் செய்யுட்கள் பாயும் மடையாகிய செஞ் செவிகளையும் உடைய மாவளத்தானுக்கு அவரைக் கண்டாலே மகிழ்ச்சி பொங்கும்;அவர் வார்த்தையைக் கேட்டாலோ


யானைக் கதை

 

 பிசிர் என்பது ஒரு சிறிய ஊர். ஆந்தையார் சிறந்த புலவர். அவர் பிறந்தமையால் அவ்வூருக்கே ஒரு தனிச் சிறப்பு உண்டாயிற்று. ஆந்தையார் பெயரோடு பிசிரின் பெயரும் ஒட்டிக்கொண்டது. பிசிராந்தையாரென்றே இன்றும் அப் புலவரை வழங்குகின்றோம். புலவர் பெருமான் புதிய பாண்டிய மன்னனைக் கண்டுவரலாமென்று புறப்பட்டார். இராசதானி நக ருக்கு வந்தார். அவருடைய நண்பர்கள் அவரை எதிர்கொண்டழைத்துப் பாராட்டினார்கள். பாண்டிய மன்னனாகிய அறிவுடை நம்பியின் குணங்கள் எத்தகையனவென உசாவி அறிந்துகொண்டார். “அவன் நல்லவன்தான் அவனுடைய மந்திரிகளே பொல்லாதவர்கள். அவர்களுடைய


யமன் வாயில் மண்

 

 “புறப்படு.” “எங்கே?” “கொலைக்களத்திற்கு.” “ஆ!” அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் புலவர் வந்திருக்கிறார். அவரைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கொண்டு குதுகலித்தார்கள். தமிழுலக முழுவதும் பெரும் புகழ்பெற்ற சிறந்த கவிஞர் அவர். அரசனை நோக்கிச் செல்லும் அப்புலவரைச் சூழ்ந்த கூட்டம் யமனை நோக்கிச்


முற்றுகை

 

 முற்றுகை! சாமான்யமான முற்றுகையா என்ன? முடியுடை மூவேந்தர்களும் சூழ்ந்து- கொண் டிருக்கின்றனர். சேர சோழ பாண்டியரென்னும் அம்மூன்று அரசர்களும் தம்முடைய படைப்பலம் முழுவதையும் திரட்டிக்கொண்டு வந்து பறம்பு மலையைச் சுற்றிக் குவித்திருக்கின்றனர். சேரனுடைய யானைப் படையின் மிகுதியைச் சொல்வதா? சோழனுடைய ஆட்படையைச் சொல்வதா? பாண்டியனுடைய குதிரைப் படையைச் சொல்வதா? எதை அதிகமென்று சொல்வது? இந்தப் படைப் பெருங் கடலினிடையே கூம்பு உயர நிற்கும் கப்பலைப்போலப் பாரியின் பறம்பு மலை நிற்கிறது; அந்த மலை எப்படி அசைவற்று நிற்கிறதோ


தொல்காப்பியரின் வெற்றி

 

 தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார் தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். ‘குடியும் குடித்தனமு’மாக வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் ‘ கங்கையாரிடத்தில் காவிரியாரையும், யமதக்கினியாரிடத்தில் திருணதூமாக்கினியாரையும், புலத்தியனாரிடத்தில் உலோபமுத்திரையாரையும், துவாரகைக்குப் போய் பதினெட்டு அரசர்களையும், பதினெண் கோடி வேளிர்களையும் அருவாளரையும் பிறரையும்’ பெற்றுப் புறப்பட்டார், ஜமதக்கினியின் புதல்வர்