கதையாசிரியர் தொகுப்பு: கி.ராஜநாராயணன்

22 கதைகள் கிடைத்துள்ளன.

திரிபு

 

 புதுவை நகரில் ஒரு பங்களாத் தெரு. ஒரு பங்களாவின் முன்வீடு அது பங்களா எப்பவும் பூட்டியே இருக்கும். அதன் சொந்தக்காரர் “தெகோல்” லில் இருக்கிறார். ரெண்டு வருசத்துக்கு ஒருக்க, நினைத்தால் வந்து கொஞ்சநாள் தங்கிவிட்டுப் போய்விடுவார். முன்வீடு வீதிக்குப் பக்கத்தில் அந்த பங்களாவை ஒட்டி அமைந் திருந்தது ஆரல்ச் சுவரில் பெரிய்ய கிரில்கேட் அதில் ஒரு சிறிய கதவு. முன்விட்டில் இருப்பவர்களுக்கு அது போதும். மூன்றே பேர்கள்; அம்மா, அப்பா, ஒரு குழந்தை குழந்தைக்கு எட்டுமாசம் இருக்கலாம்.


பொம்மைகளும் கிளர்ந்தெழும்!

 

 சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும். நல்…ல ஒரு மனுச வாடைதான். பருவ வயசில் உடம்பிலிருந்து ஆணிலும் பெண்ணிலும் அப்படி ஒரு வாடை இருக்கும். ஆயி தன்னுடைய தோள்களை கக்கத்தை முகர்ந்து பார்த்தாள். சை, இது ஒருவகையான வேர்வை வாடை நடுவயசை அடைந்துவிட்டவர்களுக்கான ஒரு இளம் கொச்சைவாடை. இது அதுஇல்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். ஆயி ரொம்பச் சின்ன வயசிலேயே பொட்டு(தாலி)


காய்ச்சமரம்

 

 நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி.அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது. நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக் காடு. நாலுசோடி உழவு மாடு. தொழுநிறைய கால்நடைச் செல்வங்கள். நிறைஞ்ச வெள்ளாமைக் குடியிருக்கும் வீடு பூர்வீக வீடு போக மூணுகார வீடுகள். நிம்மாண்டு நாயக்கருக்கும் பேரக்காளுக்கும் மொத்தம் 8 பிள்ளைகள். 4 ஆம்பளப்பிள்ளைகள். 4 பொம்பளப் பிள்ளைகள். பொம்பளப் பிள்ளைகளை நல்ல இடத்துல கட்டிக் கொடுத்திருக்கு. ஆம்பிளப் பிள்ளைகள் நாலு


வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்

 

 ஒரு பணக்காரருக்குக் கலயம் நிறைய தங்கக் காசுப் புதையல் கிடைத்தது. அந்த ஊர்க்காட்டின் தரை அப்படி. பூர்வீகத்தில் அந்த மண்ணில் அரண்மனைகள் இருந்ததாகவும், வசதியான ராஜ குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், மக்களி டம் கதைகள் உண்டு. வீடு கட்ட வானக்கால் தோண்டும்போதோ, கலப்பை கட்டி முங்க உழும்போதோ, இப்படி பூமி புதையலோடு சிரிக்கும். சுற்றுமுற்றும் பார்ப்பார்கள், யாராவது பார்க்கிறார்களா என்று. யாரும் இல்லாவிட்டால் உழுவதை நிறுத்திவிட்டு, முங்க உழும்போது கட்டும் கல்லை அவிழ்த்து, அந்த இடத்தில் அதையே ஒரு


அன்பே மனிதமாய்…

 

 அருவிகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதே குற்றாலத்தில் எத்தனையோ நிகழ்வுகள்; நேரில் பார்த்தவை, சொல்லக் கேட்டவை என்று நடந்துபோனவை உண்டு. நேரம் நடு இரவையும் தாண்டிவிட்டது. தூக்கமும் போய்விட்டது. ரகுநாதன் சொல்லிக்கொண்டே வந்தார். காதுகள்தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றன; மனசு எங்கெல்லாமோ போய்ப் போய் வந்துகொண்டு இருக்கிறது. வாங்கக் கவிஞர். ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயவைப்பற்றிச் சொல்லத் தொடங்கினார் அவர். இந்தக் கதை சொல்லிகளுக்கே ஏதாவது ஒரு பழக்கம் இருக்கும் போலிருக்கு! ஒரு பாக்குப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து வாய்குள்

Sirukathaigal

FREE
VIEW