கதையாசிரியர் தொகுப்பு: கி.மஞ்சுளா

10 கதைகள் கிடைத்துள்ளன.

மனம் திருந்திய மதன்

 

  வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில் வைத்தான் மதன். பையின் அடியில் இருந்த டிஃபன் பாக்ஸ் சப்தம் கேட்டு சமையல் அறையிலிருந்து “வந்துட்டியா மதன்’ என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் மதனின் அம்மா அமுதா. நம்ம வந்தது அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது என்று பிரமித்தான் மதன். ஆனால், தன் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் தாய் நன்கறிவாள்; அவளை ஏமாற்றவே முடியாது என்பதை


உள்ளினும் உள்ளம் சுடும்!

 

  சுகுமாருக்கு ஐந்து நாள்களாகக் கடும் ஜுரம். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இன்று சற்றுத் தேவலாம் என்று தோன்றியதால், மெதுவாகக் கட்டிலை விட்டு எழுந்து வாசற்படியில் வந்து உட்கார்ந்தான். அடுத்த வீட்டின் கதவையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் அரும்பித் தளும்பியது. பக்தத்து வீட்டு பாபு சுகுமாரின் நண்பன்தான் என்றாலும் கிரிக்கெட் விளையாட்டு என்று வந்துவிட்டால் வெற்றி-தோல்வியில் சண்டை வந்துவிடும். பாபுவை எப்படியாவது அழவைக்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டிருந்தான் சுகுமார். அத்திட்டத்துக்கு தூபம்


தங்க முட்டை

 

  ஒரு கிராமத்தில் வயதான ஏழைக் கிழவி ஒருத்தி தன்னுடைய சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர் என்று யாரும் கிடையாது. அவளிடம் இருந்த அந்தக் கோழி ஒன்றுதான் அவளின் சொத்து. தினமும் அது போடும் முட்டையை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள். அவளது குடிசைக்கு அருகில் பணக்காரப் பெண் ஒருத்தி தனியாக வசித்து வந்தாள். அவளுக்கும் உறவினர்கள் யாரும் கிடையாது. அவளிடம் நிறையப் பொன் பொருள்கள்


சுழற்சி

 

  பாண்டிபஜார் அருகில் இருக்கும் அந்தப் பூங்காவைக் கடந்து செல்லும் போதெல்லாம் சுமதியின் மனதுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம் வந்து குடிகொண்டுவிடும். எங்கு பார்த்தாலும் பட்டாம்பூச்சிகளாய் சிறுவர் சிறுமியர்கள் சுற்றி சுற்றி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலர் ஏணியில் ஏறி சர்ர்ர் சர்ர்ர்…. என்று கீழே சரிந்து விழுவதும், எழுந்து மகிழ்வதுமாக இருப்பர். சில சிறுமிகள் ஸ்கிப்பிங் விளையாடுவதும், சிலர் ஓடிப்பிடித்தும் விளையாடிக் கொண்டிருப்பதைக் பார்க்கும் போதெல்லாம் சுமதியின் நெஞ்சே வெடித்துவிடும் போலிக்கும். உடனே ராதுவின்


நண்பனின் குரல்!

 

  கார்த்திக் என்னைப் பார்” குரல் வந்த திசையை நோக்கினான் கார்த்திக். அவனைத் தவிர அந்த அறையில் யாரும் கிடையாது. உடனே அவனை பயம் தொற்றிக் கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தான். பயம் ஏற்படும் போதெல்லாம் அம்மா சொல்லித்தந்த ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பான். அன்றைக்கும் அப்படித்தான், பயம் வந்தவுடனேயே அந்த ஸ்லோகத்தை முணுமுணுக்கத் தொடங்கினான். அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அதே குரல், “”பயப்படாதே கார்த்திக்! நான் பேயோ பூதமோ, பிசாசோ அல்ல; நான்தான்