கதையாசிரியர் தொகுப்பு: கி.நடராசன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறாத ரணம்

 

  நினைவுகள் சாக்கடைகளாய் தேங்கியும், தெளிந்த நீரோடைகளாய் வளைந்து நெளிந்தும் ஒடிக்கொண்டிருந்தன. ஒன்றிற்கொன்று தொடர்ப்பில்லாமல் சிறுசிறு நீர்ச்சுழிகளாய் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன. சிறுசிறு சுழிகள் இணைந்து இணைந்து பெரியதாகி சுழலுகின்றன. நினைவுகள் சுழன்று சுழன்று ஆழமாய் உள்ளே உள்ளே தனக்குள் சென்று கொண்டே இருக்கின்றன, நேற்று அலுவலகத்தில் செய்த செயல் சுயபரிதாபத்தை என்னுள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. குடித்துவிட்டு போதையில் பெரிய கலாட்டாவை அரங்கேற்றி இருந்தேன். மொடாக்குடி போதையில் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த எனது வீட்டிற்கு


தோழனுமாகிய காதலி

 

  “அவனெல்லாம் மனுசனா…… மிருகமா……. எட்டு வருசத்தில் எட்டு பிரசவம்…. நாலுப் புள்ளங்க நாலு அபாஷசன்கள்…. பொம்பள எப்படித் தாங்குவா?….. மனுசனா பொறந்தா கொஞ்சமாவது அறிவிருக்கவானா… அறுவை பண்ணிக்க… இல்ல லூப்பாவது போடுன்னு சொன்னேன்… கேட்க மாட்டிற… போய் உம் புருசன கூப்பிட்டு வா” அரசு குடும்ப நல மருத்துவமனையின் பெண் டாக்டர் யாரையோ காட்டுக் கூச்சலாகத் திட்டி கொண்டிருந்தார். “டாக்டர்… அவரு வர மாட்டேங்கிறாரு… வேலை இருக்காம்” மெல்லிய சன்னமான பெண்ணின் குரல் தயக்கத்துடன் பதில்