கதையாசிரியர் தொகுப்பு: கி.நடராசன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

தீச்சுவை பலா

 

  “இருளா! இந்தாப் புடி உங் கூலி பத்து ரூபா ” என்று ஆண்டை நீட்டினார், கருத்த வட்ட முகத்தில் பளிச்சிட்ட அழகிய கண்கள் வேறு எங்கோ நோக்கின. இருளப்பன் அந்த பணத்தை வாங்காமல் கைகளைப் பின்னுக்கு இழுத்து கொண்டு பிகு செய்தான். அவன் அப்பனுக்கு துணையாக பலா கன்றுகளுக்குக் குழி தோண்டினன். குழிகளில் எருவிட்ட பின்பு நட்டு நீர் ஊற்றினான். அப்பனுடன் இருந்து நாள் முழுவதும் இவ்வாறு செய்தான். அப்பன், தாத்தா காலத்தில் பயிர் செய்யப்பட்டு


மனைப் பாம்பு

 

  தூக்கம் அறுபட்டு முழிப்பு தட்டியது. அனிச்சையாகவே அரிசி கழுவின நீர், சோறு வடித்த கஞ்சி தண்ணீர், மீதியான சாதமென அனைத்தும் கலந்து புளித்து கிடந்த கழுநீரைக் குடத்துடன் எடுத்து வந்து கண்ணுசாமி மாட்டுத் தொட்டியில் ஊற்றினார். பொதபொதன்னு ஊறிப் போயிருந்த புண்ணாக்கை குடுவையுடன் அதில் கவிழ்த்தார். எருதுகளை அவிழ்த்ததும் அவைகள் தொட்டியிடம் வேகமாக நடந்தன. புண்ணாக்கைத் தின்பதற்கான ஆசையில் தொட்டிக்குள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு தலைகளை விட்டு தொட்டியை உருட்டி உடைத்து விடும் என்று அவர்


கீற்று

 

  அவர்களை எதிர்பார்த்து இருந்தேன். அந்த நல்ல நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை. வெள்ளிக்கிழமையன்று எனது வீட்டின் கதவைக் கியூ போலீசார் தட்டினர். ஐயா கூப்பிடுகிறார் என்று ’அன்புடன்’ வெள்ளை வேனில் அள்ளிப்போட்டுப் பறந்தனர். நாளும் அதிகரிக்கும் விலையேற்றம், நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க ஆட்சியாளர்கள் பல பாதுகாப்பு வால்வுகளை வைத்துள்ளனர். மக்களைத் திசைத் திருப்ப அரசியல்வாதிகளுக்கு பயன்படும் இந்த வால்வுகளில் ஒன்றுதான் “தீவிர வாதம்”. இந்த வார்த்தையை தங்கள் நலனுக்கு வசதியாக அவரவர்கள் பயன்படுத்திக்


ஊனம்

 

  விசில் சத்தம் கேட்ட மறுவினாடி பல்லவன் ஒட்டுநர் வேகமாக பேருந்தை ஒட்டினார். வண்டியை நிறுத்துமாறு கையை கையை ஆட்டிக் கொண்டு எதிரில் வேகமாக ஒருவர் ஒடி வந்தார். பேருத்தை நிறுத்துவதில்லை என்ற முடிவுடன் ஒட்டுனர் ஒட்டும் பொழுது ஒருகணம் நிதானித்தார். ஊனமாகி சூம்பி போன கால்தொடையில் கையை வைத்து அழுத்தி தரையில் அதை ஊன்ற செய்து ஓடிவருபவர் ஊனமுற்றவர் என்பதை அவர் உணர்ந்தார். பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தினார். அவர் வண்டியில் ஏறுவதற்கு ஒருவர் உதவி


ஒய்யார கொண்டை

 

  சிங்காரச் சென்னையில் விடிந்தால் கல்யாணம் மகிழ்ச்சியிலும் ,பரவசத்திலும் சுசீலாவிற்கு தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலராய் கனவுகள் வருகின்றன. நியான் விளக்குகளில் சொலிக்கும் கனவு நகரம். வழு வழுச் சாலைகளில் வழுக்கியபடி விரையும் கார்கள். மாட மாளிகைகள். சுகந்தம் வீசும் கடற்கரை காற்று… புரண்டு புரண்டு படுத்தாள், சிறிது கண் அயர்ந்திருப்பாள். அதற்குள் அம்மா எழுப்பி விட்டாள். மணப்பெண்ணை அலங்காரம் செய்ய வேண்டும். காலை கடன்களை முடிக்க அவசரப்படுத்தினாள். முழுநிலா வானில் பிரகாசமாக ஒளி