கதையாசிரியர் தொகுப்பு: கி.நடராசன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

கொடிதினும் கொடியது

 

  கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டும் ஆங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ஒரு புதரின் அடியில் சிறிய குழியைத் தோண்டி தனது தற்காலிக வீட்டின் குளிர்ச்சியில் அந்த நாய் பகல் முழுவதும் உறங்கிக் கிடந்தது. ஆனால் புதிய ரயில் தண்டவாளங்களைப் போடுவதற்கு குழந்தை குட்டிகளுடன் ஆண்கள்,


துள்ளும் கவிதை

 

  தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும் தனது கவிதைக்காக இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு மூளையைக் கசக்கி கொண்டிருந்தான். ஊற்றெடுத்து பிரவாகமாகப் பொங்கி வராமல் எழுத்துகளும், வரிகளும் முக்கி முணகிக் கொண்டிருந்தன. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர். இவனும் மனைவியும் மட்டும் தான் வீட்டில் இருந்தனர். கவித்துவ சூழலில் கவிஞனின் வீடு அமைந்திருந்தது. இன்னமும் பனிமூட்டம் விலகவில்லை. தரையிலிருந்து


தெருநாயும் போலிஸ்நாயும்

 

  கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டுமே அங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ஒரு புதரின் அடியில் சிறிய குழியைத் தோண்டி தனது தற்காலிக வீட்டின் குளிர்ச்சியில் அந்த நாய் பகல் முழுவதும் உறங்கி கிடந்தது. ஆனால் புதிய ரயில் தண்டவாளங்களைப் போடுவதற்கு குழந்தைக் குட்டிகளுடன் ஆண்கள்,


ஒரு துளி கண்ணீர்

 

  அரை மயக்கத்துடன் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரை போலிஸ் நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் கொண்டு வந்து போட்டனர்.சிறிது சிறிதாக அவர் நினைவுகள் திரும்பத் தொடங்கின. வலியில் லேசாக முனகினார். கண்கள் மெல்ல திறந்து பார்த்தார். தான் எங்கு உள்ளோம் என்பதை அவதானிப்பதாக அந்த பார்வை இருந்தது. பத்தடி இடைவெளியில் அங்காங்கே சுவரை பார்த்த வண்ணம் சிலர் அமர்த்தப்பட்டு இருந்தனர். பயம், பரிதாபம், கருணையுடனும் மற்றும் சில கேள்விகளுடனும் அவர்கள் அமர்ந்திருந்தவர்கள். அவர்கள் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு


தத்தனேரி சுடுகாடு

 

  நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.. டக்டக்வென ஊர்ந்து சென்று மூளையைப் பிராண்டியது. திடுமென்று பாண்டி விழித்து கொண்டான் கடிகாரத்தைப் பார்த்தான். நள்ளிரவு பன்னிரெட்டை முட்கள் காட்டின. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைத்து படுத்தவன் அகாலத்தில் எழுந்து விட்டான். புரண்டு புரண்டு படுத்து மீண்டும் தூங்குவதற்கு பகீரத முயற்சி செய்தான். தூக்கம்தான் வந்தபாடில்லை. சட்டையைப் போட்டு கொண்டு வெளியே போவதற்கு