கதையாசிரியர் தொகுப்பு: கிரேஸி மோகன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!

 

 கி.மு….கி.பி. – அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல, உலகில் மாமியார் – மருமகள் சண்டையே இல்லாத காலத்தையும், சண்டை இருந்த காலத்தையும் பாகுபடுத்திக் கூறவேண்டுமானால் அளவுகோலாக ஆ.ஏ.மு. – ஆ.ஏ.பி. என்ற வாசகங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். …. அதாவது, சண்டையே இல்லாத காலத்தை ஆதாம் ஏவாளுக்கு முன் என்றும், சண்டை இருந்த – இருக்கும் – நிச்சயமாக இருக்கப் போகும் காலத்தை – ஆதாம்


காதல் சைகாலஜி

 

 ‘காதல் ஒலிம்பிக்ஸ்’ – அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத் துவக்கி வைக்கப்பட்ட காதல் ஒலிம்பிக்ஸ் இன்றுவரை ஜனரஞ்சகமாக விளையாடப்பட்டு வருவது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே! காதல் ஒலிம்பிக்ஸில் தலைதெறிக்க ஓடி எப்படியாவது கல்யாண மெடலை வாங்கிவிட ஒரு ‘ட்ராக்’கில் ஓடும் சம்பந்தப்பட்ட ஜோடியை ஒரு கட்சி என்று வைத்துக்கொண்டால், இவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்திப் பிரித்துவிட வேண்டும் என்று கச்சம் கட்டிக்கொண்டு குறுக்கே ஒரு ட்ராக்’ போட்டு


மேனரிஸம்

 

 ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஊதல் – அதாவது புகைப் பிடித்தல். இழுக்கயிழுக்க இன்பம் இறுதிவரை பாலிஸியில் சிகரெட்டின் ஃபில்டர் பகுதி வரும் வரை இழுத்து…. இதற்கு மேலும் இழுத்தால் புகைக்குப் பதிலாக வெறும் விசில் சத்தம்தான் வரும் என்ற நிலைவரும் அளவுக்கு அலுப்பில்லாமல் கர்ம சிரத்தையாக சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்திருக்கலாம். வேலை மும்முரத்திலோ அல்லது மனம் ஒடிந்துபோன சோகக் கட்டங்களிலோ (கெட்டப் பழக்கம் உள்ளவர்களுக்கு இது


சௌக்கிய மன்னன் பட்டப்பா!

 

 “என்ன சார் சௌக்கியமா?” – அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக எதிரில் வரும் அறுவைகளிடமிருந்து தப்புவதற்காகவும், அதே சமயத்தில் நம்மோடு இயல்பாக ஊறிய இந்து – சமவெளி நாகரிகத்தை’ வெளிப்படுத்துவதற்காகவும் நாம் சகஜமாகக் கேட்கும் ஒரு சாதாரண கேள்வி இது. மனைவியின் தலைவலிக்கு (நமது தலை வலிக்கும் சில சமயங்களில் தலைவலி வருகிறதே!) தைலம் வாங்கச் செல்லும் நாம், அறியாமையில் அசிரத்தையாகக் கேட்கும் இந்தக் கேள்வி வேலியில் செல்லும் ஓணானை வேட்டியின் மீது அசட்டுத்தனமாக


க்யூவில் வந்தவர்கள்

 

 சர்வாதிகாரி ஹிட்லர் எழுதியதாகச் சொல்லப்பட்ட உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கிய – ரகசிய டயரிகள் கடைசியில் போலி என்று நிரூபிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததே… ஆதாரம்: சர்வதேச செய்திப் பத்திரிகைகள். இதிகாச, புராண, சரித்திர பிரபலஸ்தர்களின் பர்சனல் டயரிகளை நான் படித்துப் பார்த்தது உங்களுக்குத் தெரியாததோ! ஆதாரம்: விடியற்காலையில் நான் கண்ட கனவு. “மடையா! மாற்றான் தோட்டத்து டயரிகளைப் படிப்பது மானம் கெட்ட செயல்” என்னைத் தூற்றாதீர்கள். இதிகாச புராண சரித்திரப் புள்ளிகள் எனது அதிகாலை சொப்பனத்தில், வரிசையாக க்யூவில்


ஐயோ…பேய்!

 

 சர்வ சாதாரணமாக ‘நீ எப்பவாவது குற்றாலத்துல குளித்ததுண்டோ?’ என்று கேட்பது போல் ‘நீ எப்பவாவது பேயைப் பார்த்ததுண்டோ?’ என்று எனது நெருங்கிய நண்பனின் தாயாதி ஒரு முறை என்னைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார். “அதான் இப்ப என் எதிரிலேயே பார்த்துக் கொண்டே இருக்கிறேனே…” என்று கூறி அவர் மனதைப் புண்படுத்த விரும்பாததால், “நான் பேயைப் பார்த்தது இல்லை” என்ற பாவத்தில் தலையாட்டினேன். நிற்க… எனது நண்பனின் தாயாதியை உங்களுக்குச் சிறிது அறிமுகம் செய்து வைக்கிறேன். பேய்,


யோக நாயகி

 

 ‘யோகநாயகி’ என்றதும் சாண்டில்யனின் குதிரைகள் குளம்பொலி கேட்கும் சரித்திர நவீனம் என்று சபலப்பட்டு வருபவர்கள் சற்றே விலகுங்கள். இந்த யோகநாயகிக்குக் கொச்சையாகப் பலவித நாமாவளிகள் உண்டு. உதாரணத்துக்குச் சில… குருட்டாம் போக்கு அதிர்ஷ்டம், சுக்ரதசை, அடிச்சுது ஜாக்பாட், அவள் காட்டுல மழை…! யோகநாயகி நம்மைப் பாசத்தோடு ஒரு முறை பார்த்துவிட்டால் போதும்… நமது வாழ்க்கை திடீரென்று சுபிட்சமாகிவிடும். நமக்கே தெரியாமல் ஆடு துறையில் ஒரு திடீர் அத்தை முளைத்து, தனது நாலு வேலி நிலத்தையும், பம்ப் செட்,


நில் கவனி-கிழவி

 

 இந்த சென்னை மாநகரத்தின் சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் மீது ஏறி விரைந்து செல்லும் கனவான்களே! பாதசாரிகளைப் பழுதாக்காமல், கோழி, வாத்து, நாய் போன்ற வாயில்லா ஜீவன்களின் இறைச்சியை சாலை நடுவே பரிமாறாமல், பயபக்தியோடு சர்வ ஜாக்கிரதையாக வாகனங்களைச் செலுத்தும் மனோபாவத்தை எப்படியாவது வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது போல விபத்து நாயகி’ சுலபமாக முடிந்துவிடக்கூடிய சிறுகதை அல்ல…ஒரு தொடர் கதை. நான் சொல்வதை ‘ஸாரி, கொஞ்சம் ஓவர்’ என்று அலட்சியப்படுத்தாதீர்கள். ஒரு


சிலுக்காணத்தம்மன்!

 

 மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு கட்டத்தில் கிருஷ்ணரைக் கட்டிப் போடுவதற்காகக் கயிற்றோடு வந்த சகாதேவனின் தலை சுற்றும்படி பார்த்த இடத்திலெல்லாம் பரந்தாமன் தெரிந்தானாம். அதுபோல , கொஞ்ச காலமாகவே சென்னையில் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் எனக்கு சிலுக்கு ஸ்மிதாதான் தென்பட்டார். ‘பார்த்த இடத்திலெல்லாம் நந்தலாலா – சிலுக்கு போஸ்டர் தெரியுதடா நந்தலாலா’ எங்கெங்கு நோக்கிலும் சிலுக்கடா – அவள் எழில் சென்னை மூலைமுடுக்கடா’ இப்படிப் புதுக் கவிதை எழுத வைக்கும் அளவுக்கு ‘சிலுக்குமாயை’ என்னை


என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே!

 

 பாகிஸ்தானில் தற்சமயம் பரிதாபத்துக்குரிய இந்திய அணிக்கும் புஜபலபராக்கிரம். இம்ரான்கான் அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் யுத்தத்தை பேரறிஞர் பெர்னார்ட்ஷா பார்த்திருந்தால் இப்படித்தான் குரூரமாக விமர்சனம் செய்திருப்பார். “பதினோரு முட்டாள்கள் (பாகிஸ்தான் அணி) விளையாடுகிறார்கள். அதைப் பதினோரு முட்டாள்கள் (இந்திய அணி ) விளையாடாமல் வெட்டியாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” “இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் மீது படையெடுத்த முகலாய மன்னர்கள் யார் யார்?” என்ற கேள்வியை ஒரு சரித்திர மாணவனைக் கேட்டால் அவனும் தயங்காமல்