கதையாசிரியர் தொகுப்பு: கிருஷ்ணா

4 கதைகள் கிடைத்துள்ளன.

பூரணத்துவம்

 

  “”ஆசையாயிருக்குடா, போகலாமா?” அம்மா கேட்டாள். அப்போது அம்மாவின் முகம், பலூன் கேட்கும் சிறுமியின் முகம்போல இருந்தது. கண்களில் பதினைந்து வருட ஏக்கம் தெரிந்தது. வாயைத் திறந்து அம்மா அதிகம் பேசுவதேயில்லை. அம்மாவின் அந்தத் தோற்றம், நான் ஏதோ அவளின் அப்பா போலவும் அவள் என் மகள் போலவும் ஓர் உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. அந்தப் புதிய உணர்வின் ருசியை அனுபவித்தபடி தலையசைத்தேன். மறந்து போன அம்மாவின் சிரிப்பை, நீண்ட நாள் கழித்து அவள் முகத்தில் கண்டேன்.


காதல் ரேடியோ!

 

  கடைவாசலில் அந்தப் பெரியவர் வந்து நிற்பது தெரிந்தது. அவர் மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்தேன். ரிப்பேருக்கு வந்த ரேடியோ ஒன்றை ஊன்றிக் கவனிப்பது போல நடிக்க ஆரம்பித்தேன். ரேடியோ, ட்ரான்சிஸ்டர், டூஇன்ஒன், டி.வி. போன்ற எலெக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்யும் கடை நடத்தி வருகிறேன். போனமாதம்தான் இந்தக் கிழவர் என் கடைக்கு வந்தார். வெள்ளை வேட்டி, சட்டையில் ஐந்தரை அடி உயரத்தில் இருந்தார். எழுபது வயது இருக்கலாம். வயதின் காரணமாகவோ, இல்லை,


காதலுக்கு நீங்க எதிரியா?

 

  அடுத்த வாரம் ப்ளஸ் டூ பரீட்சை ஆரம்பம். என் எதிரே அமர்ந்திருந்த மாணவிகளைப் பார்த்தேன். வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் மருத்துவர்களோ, பொறியாளர்களோ, ஆசிரியர்களோ, கணக்கர்களோ? ஒவ்வொரு மாணவியாக எழுந்து, அவர்களின் கனவு, வாய்ப்பு, மேற்படிப்பு பற்றி சொல்லச் சொன்னேன். கடந்த ஒரு வருடமாக இவர்களின் வகுப்பு ஆசிரியையாக இருந்ததால், அனைவரின் பெயரும், குணநலன்களும் எனக்கு அத்துப்படி! இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த துர்காவின் முறை வந்தபோது, அவள் எழுந்து நின்றாள். தலை


என் கணவரின் கனவுக் கன்னி!

 

  ‘‘உட்கார்ந்து, உட்கார்ந்து காலெல்லாம் வலிக்குது. கடை வீதி வரைக்கும் ஒரு நடை போயிட்டு வந்துடறேன், பானு!’’ என் கணவர் இப்படிச் சொன்னதும், கேலிச் சிரிப்புடன் மறுப்பாகத் தலை அசைத்தேன். ‘‘உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? சிகரெட் பிடிக்க ஏதுடா வழின்னு பார்க்கறீங்க. அதெல் லாம் எங்கேயும் நகரக் கூடாது!’’ இவரின் மாமா பேத்தி திருமணத்துக் காக வந்திருக்கிறோம். இன்று மாப்பிள்ளை அழைப்பு. சத்திரத்தில் சுமாரான கூட்டம். நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருந்தனர். அதுவே கிட்டத்தட்ட எண்பது