கதையாசிரியர் தொகுப்பு: கிண்ணியா சபருள்ளா

9 கதைகள் கிடைத்துள்ளன.

அத்து மீறல்..!

 

 சுமார் அஞ்சு வருஷத்துக்கு முந்தியெல்லாம் வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஒரு சேர்கிட் கோர்ட்டாக இயங்கி வந்த கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இப்ப அஞ்சு வருஷமா நிரந்தர நீதவான் நீதிமன்றமாக இயங்கிக் கொண்டிரக்கிறது. நிரந்தர நீதவான் நீதிமன்றமாக ஆக்கப்பட முதல்ல கெழமையில் ஒருநாள் மட்டும் கோர்ட் இடம் பெறக்க கேசுன்னா அப்படிக் கேசு… கோர்ட் சனத்தால நெரம்பி வழியும்… பின்னேரம் அஞ்சு மணி மட்டும் கோர்ட் நடக்கும்னா பாருங்களேன்… அம்புட்டு வழக்கு அன்னிக்கு இருக்கும். அப்பல்லாம் திருகோணமலை கோர்ட்டுல


மன சாட்சி

 

 அத்தனை சப்தங்களையும் ஒரு சேர எங்கோ இனந் தெரியாததோர் இடத்தில் வைத்துக் கொண்டு அசப்தத்தின் ஒட்டு மொத்தக் குத்தகையில் அக்கிரமம் புரிந்து கொண்டிருந்தது ஒருவித அமானுஷ்யம்… திறந்த நீதிமன்றத்தில் அத்தனை கண்களும் தீர்ப்புக்காகக் காத்துக் கிடந்தன. நீதிமன்றம் என்றாலே வழமையாகவே குண்டூசி விழுந்தாலும் ட்ரம்மில் விழும் சப்தமாக… அத்தனை அமைதியாக… எங்கே வெளித்தள்ளப்படுகின்ற மூச்சு சப்தமாக வந்து விடுமோ என்ற அச்சத்தில் சப்தங்கள் அத்தனையும் சப்த நாடியாகி அவ்வளவு அமைதியையும் நிசப்தம் நிலவும் சூழலையும் வேறெங்கும் பார்க்க


தூக்குக் கயிறு

 

 நான் சொல்லுவதனைக் கொஞ்சம் நுணுக்கமாகவும் அவதானமாகவும் கேட்டுக் கொள்ளுங்கள். நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு உங்களில் யாருக்காவது பதில் சொல்ல முடியுமா…என்று எனக்குத் தோணவில்லை…உங்களால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவுமில்லை. உங்களில் யாருக்காவது உங்களது மரணம் அல்லது சாவு நிச்சயிக்கப்பட்டுள்ள நேரம் எதுவென்று தெரியுமா அல்லது உங்களால் உறுதிப் படுத்திச் சொல்லத்தான் முடியுமா… குணப்படுத்தவே முடியாத எயிட்ஸ் லியூக்கேமியா நோய்க்காரர்களுக்குக் கூட குறிப்பிட்ட காலத்தில் இவர்கள் செத்து விடுவார்கள் என வைத்தியர்கள்


எதேச்சதிகாரம்

 

 பகல் பதினொன்று மணியிருக்கும். கோடை வெயிலின் கதகளியில் கால நிலை குச்சுப்புடி ஆடிக் கொண்டிருந்தது. வெயிலின் வியர்வையில் சோர்வு உழவு செய்து கொண்டிருந்ததில் மனித குல நமைச்சல காரணமேயில்லாமல் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது. மனிதனின் மனோ நிலை மாற்றங்களுக்கு பிரதான காரணமாக காலநிலை மாற்றங்கள் கவனயீர்ப்பு செய்து விடுகின்றன… மற்றும்… என கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் உளவியலாளர்களைக் கொஞ்சம் விட்டு விட்டு கரையோரமாய் நீண்டு சென்று கடலை முறைத்துக் கொண்டிருக்கும் கொங்ரீட் வீதியின் அழுக்கற்ற அழகினைப் பார்த்து


றிஸானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும்

 

 பூக்களால் ஒரு புகைப்படம். பளீர்னு மனசுக்குள் மின்னல் வாசனை ப்ளாஷ்; ஆகுகின்றது. ரொமான்ஸ் ஸ்பரிசித்த வார்த்தைகளில் காதலின் மோட்சம.; தபூ சங்கரின் தாக்கம் நிறையவே தெரிகின்றது. அவரது கொஞ்சல் வழிக்கல்வியிலிருந்து பூக்களால் ஒரு புகைப்படம் சற்று மாறுபட்டது. டீன் ஏஜ்காரர்கள் தீவிர ரசிகர்களாகியிருப்பார்கள். துண்டுக் கவிதைகளின் தொகுப்பாக சுவாசித்துக் கொண்டிருக்கும் பூக்களால் ஒரு புகைப்படம் தந்த முஜாரத் ஒரு முடிவோடுதானிருந்தான். கவிதை எழுதுபவர்களின் பெருங் கனவாக இருக்கின்ற தொகுதி போடல் எனும் வெளியில் மிதந்து கொண்டிருந்த முஜாரத்