கதையாசிரியர் தொகுப்பு: காரை ஆடலரசன்

22 கதைகள் கிடைத்துள்ளன.

அவரவர் பார்வை..!

 

  நாராயணனுக்கு ரேவதி மணம் செய்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ரேவதி 22 வயதில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குக்கூட தாயாகாத நிலையில்…ஏன்….? கருவே தரிக்காமல் 23 வயதில் விதவையானவள். இவ்வளவிற்கும் அவள் அனாதை. நட்ராஜ் அவளை அனாதை ஆசிரம் போய் தேடிப் பிடித்து திருமணம் முடித்தான். எல்லா இளைஞர்களையும் போலல்லாமல் இப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்பது அவன் எண்ணம், விருப்பம். உலகத்தில், நாட்டில், ஊரில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதில் நாராயணனுக்கு ரொம்ப


கல் விழுந்த கண்ணாடிகள்..!

 

  அவன் தன் கையிலிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறைப் படித்தான். அன்பு வசந்திற்கு வணக்கம். நான் தங்களை நேரில் வந்து அழைக்க அருகதையற்றவள் நினைப்பில் இந்த மடல் அழைப்பு. நம் மகன் அஜய்க்குத்; திருமணம். இதுவரை என்னோடு வளர்ந்த பிள்ளை அப்பா வந்தால்தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடிக்கிறான். அவனுக்கு அம்மா அப்பா சேர்ந்து ஆசீர்வாதம் செய்வதில் விருப்பம்போல. அதனால் இந்த முரண்டு. மகன் ஆசையை நிறைவேற்ற அவனுக்காக என்னை மன்னித்து நடந்ததை மறந்து திருமணத்திற்கு


மாதவி மரணம்….!

 

  பெஞ்சில் மாலை போட்டு இருந்த மாதவி உடலைச் சுற்றி உற்றார், உறவினர், ஊர் கூட்டம். தலைமாட்டில் தாய் ஆண்டாள் தலைவிரிகோலமாய் அமர்ந்து, ”அம்மா…! அம்மா…! என் மவளே !” என்று கதறினாள். ”மவளே! தாயீ,…” மாதவன் தன் மனைவிக்கருகில் நின்று மனசுக்குள் கதறி வாயில் துணி வைத்து விம்மி கண்ணீர் விட்டார். கண்ணனும் கதிரேசனும் கைகட்டி, முகத்தில் சோகம் அப்பி அந்த கூட்டத்தில் சுவரோரம் ஒதுங்கி எல்லாவற்றையும் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு அசையாமல் நின்றார்கள்.


கூட்டுக் குடும்பம்…!

 

  ஞாயிற்றுக்கிழமைப் பொழுது இப்படி அதிரிபுதிரி, தடாலடியாய் விடியுமென்று அன்பழகனும் அன்னபூரணியும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் வீட்டில் வேற்றாள்கள் விருந்தாளிகளாய் வந்து தங்கி இருக்கையில் சிறிதும் நாகரீகமில்லாமல் இப்படி நடக்குமென்று இவர்கள் நினைத்துப் பார்க்கவுமில்லை. இதோ….இதோ….. இப்போதுதான் நடந்தது. நடந்த சூடு கொஞ்சமும் ஆறாமலோ எழுந்து வந்துவிட்டார்கள். அதனால் தம்பதிகளுக்குள் பேச்சில்லை. வாய்மூடி மௌனம். மனதில் ஓலம். நடந்தார்கள். ஒருவர் மீது மட்டுமா குற்றச்சாட்டு! இருவர் மீதும் குற்றச்சாட்டுகள். பெற்றப்பிள்ளை மகன் வந்து இந்த அதிர்வெடி, இடியை


மாற்றம் மாறுதலுக்குரியது……!

 

  ”லட்சுமி !” என்ற குரல் கொடுத்துக் கொண்டே திறந்த வீட்டிற்குள் கையில் பையுடன் நுழைந்த விசாலம் கூடத்து கட்டிலில் அமர்ந்திருக்கும் பத்து வயது பெண் அருணாவைக் கண்டதும் குரலை நிறுத்தி முகம் மாறினாள். அருணாவிற்கு வந்தவள் யாரென்று புரிந்து விட்டது. ”பெரிம்மா..ஆ” மெல்ல குரல் கொடுத்தாள். அவளைத் தாண்டிச் செல்ல முடியாத விசாலம் தன் முக மாறுதலை மறைத்து, ”ஆமாம்;டி தங்கம். நானேதான்.!… உனக்கு பார்வை மட்டும் இருந்தா ராணி !” சொல்லி சமாளித்து தலையை