கதையாசிரியர் தொகுப்பு: கவிதா முரளிதரன்

1 கதை கிடைத்துள்ளன.

காபி கோப்பைக்குள் நிறையும் கடல்

 

  செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே டிகாக்ஷன் இறங்கும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. வருமா… வராதா எனப் போக்குக் காட்டும் மழையின் முதல் துளிபோல் ஒரு சத்தம். மழை கிளர்த்தும் மண்வாசனையைப்போல ஃபில்டர் காபிக்கும் ஒரு வாசம் உண்டு. வீடு முழுவதும் நிறையும். அதுவும் அத்தையின் காபி, தெரு முழுவதும் வாசம் நிறைக்கும். இவ்வளவு சீக்கிரமாகவா அத்தையும் மாமாவும் வந்து விட்டார்கள்? கைக் கடிகாரத் தைப் பார்த்தேன். இல்லை, நான் தான் தாமதமாக வந்திருக்கிறேன்.