கதையாசிரியர் தொகுப்பு: கவிதா சொர்ணவல்லி

7 கதைகள் கிடைத்துள்ளன.

கதவின் வெளியே மற்றொரு காதல்

 

  ”வேல்னு ஒரு பையன். பெரிய ஜர்னலிஸ்ட். அஞ்சு மாசம் முன்னே அறிமுகம். நாலு மாசமா நல்ல ஃப்ரெண்ட். இப்ப கொஞ்ச நாளா லவ்வர் மாதிரி தெரியிறான். ஆக்ச்சுவலா நான் அவனை லவ் பண்றேன்னு நினைக்கிறேன்டி!” அதிர்ச்சி ப்ளஸ் குழப்பம் ப்ளஸ் ஆச்சர்யம் ப்ளஸ் இன்ன பிற சங்கதிகள் என்னை அதிரடித்தன. ஏற்கெனவே ஒரு காதலில் இருப்பவளிடம் இருந்து அந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும், ‘எங்களது எ ட்ரூ லவ் ஸ்டோரி!’ என்று அவள் வாயால்


விலகிப்போன கடவுள்கள்!

 

  கால் நனைக்க தாமிரபரணி, கை கழுவ பாபநாசம், தலை துவட்ட தென் பொதிகை, கன்னம் வருட நெல்மணிகள் என்று உலகத்தைப் பச்சை வண்ணமாக மட்டுமே உணர்ந்த ஒரு பெண்ணான எனக்கு சென்னை பிடிக்காமல் போனதில் அதிசயம் இல்லை. இங்குள்ள கடவுள்களிடமும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. சென்னையின் தெருவோரப் பிள்ளையாரிடம்கூட ஒட்ட முடியாமல்போனது எனக்கே எனக்கேயான வருத்தம். நகரத்தில் எல்லா கடவுள்களும் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறார்கள். ஆனால், பக்கத்தில் வரவழைக்கிற அந்நியோன்னியம் இல்லை என்று தோன்றியது