கதையாசிரியர் தொகுப்பு: கலைவேந்தன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

செத்துப் போ பிரியா..!

 

 2162 நவம்பர் மாதம். 20 ஆம் நாள். குருவின் அந்த அறை பாலிஃபெனால்சிந்தடிக் கலவையான சுவர்களால் செய்யப்பட்டவை. சிமெண்ட் செங்கல் ஜல்லி சுண்ணாம்பு ஆகிவை வழக்கொழிந்து நூறு வருடங்கள் ஆகிவிட்டன. 2012 டிசம்பர் 21 இல் ஏற்பட்ட மஹா பிரளய அழிவில் பழைய எர்த் 21.2012.12 மாடல் பூமி சுத்தமாக அழிந்து இந்த புதிய பூமியை உருவாக்கி இருந்தார்கள். அந்த அமைப்பின் பூரண உரிமை இப்போது இந்த புதிய உலகின் தலைவன் குருவுக்கு மட்டுமே என்பது எழுதப்படாத


அண்ணி என்றால்..

 

 அம்மா வரலட்சுமி போன வாரம் இறந்துவிட்டாள். இறப்பு என்பது தொடர்பில்லாதவர்களுக்கு ஒரு சம்பவம். உற்றவருக்கோ உயிர்வேதனை. இந்த ஐம்பத்தெட்டு வருடவாழ்க்கையில் அம்மாவின் சிரமங்களையும் வேதனைகளையும் நான் நன்கு அறிவேன். எனக்கு ஐந்துவயதாகும்போது என் அப்பா தவறியதும் அப்போது பத்துவயது அண்ணன் ரகுவையும் என்னையும் ( ராம் ) எப்படி வளர்ப்பது என்று அம்மா குமுறி அழுததும், என் அப்பாவின் சாவுக்கு வந்தவர்கள் எங்கே இன்னும் ஒருநாள் இருந்தால் எங்கே குடும்பப்பொறுப்பை சிறிதாவது ஏற்கவேண்டி வருமோ என்று பயந்து


ஷாக்

 

 எல்லாரையும் போல காலையில் தன் உள்ளங்கை பார்த்துதான் கண்விழித்தான் விக்னேஷ். அப்போது தான் சட்டென்று நினைவுக்கு வந்தது நேற்று நிகழ்ந்த சம்பவம். அவனது வளர்ப்பு மாமாவின் சட்டென்ற மனநிலை மாற்றம். மனைவியை இழந்து பிள்ளையில்லாத அவருக்கு எல்லாமாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்ட விக்னேஷை சட்டென்று எங்கோ அதள பாதாளத்தில் தள்ளிவிட்டு என்றைக்கோ எவளுடனோ செய்த தவறுக்கு பிள்ளையாய்ப் பிறந்த 23 வயது கட்டழகிக்கு தன் சொத்துகளை உயில் எழுதிவைக்கப்போகும் அந்த மாமாவை எப்படி கொல்லலாம் என்று


ஆராவமுதனும் அவசர விளக்கும்

 

 அந்தக்காலத்தில் அலாவுதீனுக்கு ஓர் அற்புதவிளக்கு கிடைச்சமாதிரி நம் ஆராவமுதனுக்கும் அவசரவிளக்கு ஒன்று கிடைத்தது. ஆராவமுதன் தனது ஆபீஸுக்கு வந்து ஸ்டைலாக இங்கிலீஷ் பேசிய ஒரு ‘டை’மனிதனின் பேச்சுக்கு மயங்கி ‘ஐயோஐயையோ’ ( IOIIO ) பேங்கின் கடனட்டைக்காக அப்ளை செய்தான். அந்த கடன்கார அட்டையும் ( அட கிரெடிட்கார்டுங்கோ) ஒரே வாரத்தில் ஆராவமுதனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. தலைகால் புரியாமல் அந்த கடன்கார அட்டையை முன்னும் பின்னும் புரட்டிப்பார்த்தான் ஆராவமுதன். தன் மனைவி வடிவாம்பாள் எனும் வடிவுடன்


தூமகேது

 

 தூமகேது பகுதி ஒன்று. கார்த்திகை மாதத்தின் நிலவற்ற இரவு. ஜன்னலிலிருந்து வந்த குளிர்ந்த காற்று இந்திராணியின் உறக்கத்தைக் கலைக்க போதுமானதாக இருந்தது. அரைத்தூக்கத்தில் தனது படுக்கையைக் கையால் தடவிய இந்திராணி அருகில் தத்தா இல்லாததை உணர்ந்தாள். விடை அவள் அறிந்தது தான். ‘’ ஹூம்… மீண்டும் அந்த மாயக்காரியுடன் கொஞ்சி விளையாட மொட்டை மாடிக்குப் போய்விட்டாரா..? போனவர் கதவைச்சாத்திக்கிட்டு போகனும்னு தோணலையே .. ‘’ அலுத்துக்கொண்டாள் இந்திராணி. தன் கணவன் மேல் எரிச்சலான புகாரை அவள் வாய்