கதையாசிரியர் தொகுப்பு: கலவை சண்முகம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நிலம்

 

 கந்தசாமிக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலங்கள் எல்லாம் பயிர் செய்யப்படாமல் வெறும் கறம்பாகவே கிடந்தன. புதரும் மண்டிக் கிடந்தது. வரப்புகள் தெரியவில்லை. வாய்க்கால் தெரியவில்லை. ஒரு காலத்தில்- ஒரு காலத்தில் என்ன பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு – அந்த நிலங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமாக இருந்தன. இப்போது அது கந்தசாமியின் கையில். கந்தசாமி அந்த நிலங்களை வேறு யாருக்கோ விற்கப் போகிறாராம். தகவல் கிடைத்ததும் கிளம்பிவிட்டேன். அத்தனையும் அருமையான நிலங்கள். போட்ட விதை


ஆசிர்வாதம்

 

 பிறந்த மண்ணில் இரண்டு நாள் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் வண்டி கிளம்பிவிடும். அதற்குள் என் நினைவுகள் பின்னோக்கி வேகமெடுத்தன. முப்பத்தெட்டு வருடங்கள் வேகமாக உருண்டோடிவிட்டன. மலைப்பாக இருந்தது. பணியில் இருந்தவரை எதற்குமே எப்போதுமே கலங்காத மனம், இப்போது சிறு காற்றுக்குக் கூட தலையசைக்கும் நாணல் போல் ஊசலாடுகிறது. ஒருகணம்.. ஒருகணம்தான் மீண்டும் மனதை இழுத்துப் பிடித்து என் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள முயல்வேன். இருந்தாலும் கைக்குழந்தை கையையும்