கதையாசிரியர் தொகுப்பு: கமலா பத்மநாபன்

1 கதை கிடைத்துள்ளன.

உபய களத்திரம்

 

  மெலிந்த உடலுடன் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பங்கஜம் சிறிது புரண்டு மற்றொரு புறம் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். கவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி ஆறு அடித்தது. ”ஹும்! மணி ஆறு அடிச்சுடுத்தா? மருந்து சாப்பிட வேண்டும். என்றைக்கு இந்த மருந்து சாப்பிடும் காலம் ஒழியப் போகிறதோ! இருக்கிற ஸ்திதியைப் பார்த்தால் என் மண்டையோடுதான் இந்த மருந்துக்கும் முடிவு ஏற்படும் போலிருக்கிறது. ஈசுவரா! பணம், காசு, பதவி என்று ஆசைப்படவில்லையே! ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியாகத்தானே