கதையாசிரியர் தொகுப்பு: கன்னிக்கோயில் ராஜா

7 கதைகள் கிடைத்துள்ளன.

கரடி தலையில் தர்பூசணி

 

  “நரியாரே! அந்த தர்பூசணி என்ன விலை? “அதுவா! இருபது ரூபாய். கரடியாரே நீங்கதான் ரொம்ப சிக்கனம் பார்ப்பவராச்சே. தர்பூசணி வாங்க வந்திருக்கீங்க” எனக் கேட்டது நரி. “புதுசா ஒரு சட்டம் வந்திருக்கே, அது உங்களுக்குத் தெரியாதா?” என பதிலுக்கு கேள்விக் கேட்டது கரடி. “ என்ன சட்டம்? தினமும் தர்பூசணி வாங்கணும்னா?” எனக் கேலியாகக் கேட்டது நரி. “அட! இல்லை நரியாரே! வாகனம் ஓட்டுறவங்க கட்டாயமா தலைக்கவசம் போடணுமாம்” என்றது கரடி. “ஓ… அந்தச் சட்டமா?


மலை முழுங்கி சின்னக் குருவி!

 

  சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி, ரெட்டைவால் குருவி, உழாவராக் குருவி, தூக்கணாங்குருவி, ஊர்க்குருவி என இப்படிப் பல குருவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மலை முழுங்கி சின்னக் குருவியைப் பற்றித் தெரியுமா? அதோ… ஒரு பெரிய மலை தெரியுது இல்லையா? அதற்குக் கீழ மலையடிவாரத்துல கொன்றை மரம் ஒன்று இருக்கு. அந்த மரத்துல கூடு கட்டி வாழுது இந்த மலை முழுங்கி சின்னக் குருவி. அது பொதுவான குருவிதான். தன்னால நாள்தோறும் ஒரு மலையை முழுங்க முடியுதுன்னு,


சிங்கக்குட்டியின் புது தீபாவளி!

 

  ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர் சிங்கக்குட்டி வழிதவறி நாட்டுக்குள் நுழைந்தது. இது தெரியாமல் காட்டில் விலங்குகள் இளவரசரைத் தேடிக் கொண்டிருந்தன. அன்றைக்குத் தீபாவளி. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். நம்ம இளவரசர் சிங்கக் குட்டிக்கோ பட்டாசு சத்தம் பயத்தை உண்டாக்கியது. இதற்கு முன்பு இதுபோன்ற சத்தத்தை அது கேட்டதே இல்லை. அதனால், ஒருவித பயத்துடன் எங்குச்


குட்டிக் குரங்கு புஜ்ஜி

 

  அது மலையடிவாரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர். மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன. அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட உணவு நேரத்தில் மலையை விட்டுக் கீழே இறங்கி வரும். மாணவர்கள் தருகின்ற உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். தாகம் தீர்த்துக் கொள்ள மாணவர்கள் குடிக்கும் குடிநீர்க் குழாயில், மாணவர்களைப் போலவே


குரங்கின் காற்றாடி!

 

  அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு செல்லாமல், நெகிழி உறைகளில் காய்கறிகளை வாங்கி வருவார் முத்துவின் அம்மா. அந்த நெகிழி உறைகள்தான் முத்துவிற்கும் பாலுவிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதைப் போக்கும். ஆம், அந்த நெகிழிப் பைகளை வயதான கரடி மாமாவிடம் கொடுத்து காற்றாடி செய்து வானில் பறக்கவிடுவதில் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி. அப்பா குரங்கு நெகிழியால் (பிளாஸ்டிக்) எவ்வளவு தீமை என்று கூறியும்,