Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: கணேசகுமாரன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

கிருபாகரனின் டைரி

 

  இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது, பார்க் ஸ்டேஷனை ரயில் நெருங்குவதை உணர்ந்து எழுந்தபோதுதான் கவனித்தேன். எனது ஸீட்டில் அந்த டைரி கிடந்தது. சுற்றும்முற்றும் பார்த்ததில் கம்பார்ட்மென்ட்டில் என்னைத் தவிர யாரும் இல்லை. முதலில் அது ஏதோ ஒரு புத்தகம் என்றுதான் நினைத்தேன். புத்தகத்தின் உள்ளே அடையாளத்துக்காக வைக்கப்படும் சிவப்பு நிற நாடா வெளியே நீண்டிருந்தது. நீல நிற அட்டை, பைபிளோ எனச் சந்தேகிக்கச் சொன்னது. கையில் எடுத்துப் பிரிக்க… டைரி.


குலசாமியைக் கொன்றவன்

 

  திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை ‘கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி ‘கி’ இடைவெளி ‘ரா’ இடைவெளி ‘ம’ இடைவெளி ‘ம்’… அவ்வளவுதான் கிராமம் முடிந்துவிட்டது. அந்த ஊரில்தான் மலை காத்த அய்யனார் இருக்கிறார். அவர் எந்த மலையைக் காத்தாரோ, அவர் காத்த மலைக்கு என்ன கேடு வந்ததோ, அது நமக்கு முக்கியம் அல்ல. திருப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை


அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம்

 

  என் தந்தை மேல் பிரியமானவருக்கு… என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது… இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55 வயது இருக்கலாம். என்னைப் பெற்றவளைவிட ஐந்து வயது குறைவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை வயதில், இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதம், ஆச்சர்யமானது மட்டும் அல்ல; அவசியமாகிப்போன துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான். ‘கந்தசாமிக்கு, வாரத்துக்கு எட்டு நாள் இருந்தா ரொம்பச் சௌரியமா இருந்திருக்கும். நைனார்குளத்துல நாலு நாளும், தாமரைக்குளத்துல நாலு நாளுமாப் பிரிச்சு


காயத்ரி என்கிற திலோத்தமா

 

  ”சுப்ரமணி… ஆர்த்தோ வார்டுல டாக்டர் சத்யாகிட்ட மூணு கால்சியம் வயல் கொடுத்துட்டு வாங்க. அப்பிடியே ஸ்டாஃப் காயத்ரிகிட்ட டி.என்.எஸ். எத்தனை தேவைப்படுதுனு கேளுங்க…” எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவு வார்டுக்கு சுப்ரமணி சென்றபோது, அங்கு டாக்டர் சத்யா இல்லை. காயத்ரியிடம் ஊசி மருந்து பாட்டிலைக் கொடுத்துவிட்டு, ”இன்னைக்கு ஆஃப்தானே ஒனக்கு… சாயங்காலம் சினிமாவுக்குப் போவோமா?” என்று கேட்டான். காயத்ரி என்றதும் சிவப்பாக ஒல்லியாக பெரிய கண்களுடன் கன்னத்தில் மச்சம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டால், நீங்கள் நிறைய விஜய்


பைத்திய ருசி

 

  பைத்தியங்களைக் கழுவிக் கழுவி பைத்தியமான நதி. அடிப்பருத்து அகல இலைகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அப்பெரிய மரத்தின் நீள வேர்கள் குடித்துக்கொண்டிருந்த நதி எப்போதும்போல் நகர்ந்து கொண்டிருந்தது. புனல் பெருக்கோடும் ஆர்ப்பாட்ட வேகமும் இல்லை, நீரின்றி நிலம் காட்டி மணல் நரம்பை வெயிலில் விரிக்கும் நிசப்தமும் இல்லை. நீர் நீராகவே கொள்ளும் நித்திய நதி. நீரின் நிறமும் குணமும் மாற்ற முயற்சித்துத் தோற்ற வெயில் பற்றி அறிந்தவர்கள் அவர்கள். உதிர்ந்த சருகுகளின் மீது மாலை வெயில்