Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: ஐ.ஆர்.கரோலின்

21 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகை வீடு

 

 சென்னை கிளைக்கு அஜய்யை மாற்றல் செய்திருந்தார்கள். இன்னும் பத்து வருடங்கள் சென்னை கிளையில்தான் வேலை பார்க்க வேண்டும். அதனால் குடும்பத்தை அழைத்து வருவதற்கு முன் வீடு பார்த்துவிட்டால், அவர்கள் வந்து குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று வீடு பார்க்கத் தொடங்கினார். அஜய் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அருகிலேயே பார்த்தால் நன்றாக இருக்குமென்று, காலையிலிருந்து ஒவ்வொருத் தெருவாக அலைகிறார். அவருக்கு ஏற்றாற் போல் வீடு கிடைக்கவில்லை, அஜய்க்கு பிடித்திருந்தால் வாடகை அதிகமாக உள்ளது, வாடகை குறைவில் வீடு பார்த்தால்


ஆடம்பரம்

 

 அசோக் தன் மனைவி அன்பரசியோடு சென்னை வந்து சேர்ந்தான். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. அன்பரசி ஆறு மாதம் கர்பிணியாக வேறு இருந்தாள். தனக்குச் சொந்தமாகக் கடை இருக்கிறது. என் பெயரில் சொத்துக்கள் நிறைய இருக்கிறதென்று சொல்லி அன்பரசியைத் திருமணம் முடித்தான். ஆனால், திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் அவன் ஏமாற்றியது எல்லாம் வெளியில் வந்தது. கடை அவன் சொந்த கடை இல்லை. ஐந்தாயிரம் சம்பளத்திற்கு அந்தக் கடையில் அவன் வேலை செய்திருக்கிறான். அவன்


வார்த்தைகளின் வலி

 

 நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள். நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி கூறினான். அவன் சொல்வதை புரிந்து கொண்ட மாலதி அமைதியாக நின்று அவன் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தாள். நரேன் பேசி முடித்ததும், “மாலதி அப்பாதான் பேசினாங்க, அண்ணனுக்கு கடன் அதிகாமாகி விட்டதாம், அதனால் ஊரில் வாங்கிப் போட்ட நிலங்களை விற்றுத் தரும்படி கேட்கிறானாம், அப்பாவும் சரி என்று சொல்லிட்டாங்க, அதில் நமக்கும் சமபங்கு கொடுக்கச் சொல்லியிருக்காராம்” என்றான்.


கதையாசிரியர்

 

 குறளரசன் அமைதியாக அமர்ந்து தன் கதையைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஞானயோதயம் பிறந்தது போல் எழுதத் தொடங்கினான். மீண்டும் சிந்திக்கத் தொடங்கினான். ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது அதைக் கலைக்கும் விதமாக ஒரே சத்தம் கூச்சல். அந்தச் சத்ததில் அவன் கற்பனை ஓட்டம் கலைந்ததைக் கண்டு முகம் சுளித்து என்னவென்று கவனித்தான். அவன் வீட்டின் முன்னால் இருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. உடனே வெளியில் எட்டிப் பார்த்தான். அவன் அப்பா நாதனிடம் ஊர் ஆட்கள்


மனந்திருந்தல்

 

 அதிகாலை நேரம் பூக்களும் கதிரவனைக் கண்டதும் மகிழ்வோடு மலர்ந்தன. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பூங்காவில் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அறிவு நடைப் பயிற்சிக்கு வந்தவன் அங்கிருந்த பெஞ்சில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல். எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான். வளன் அவன் நண்பன் பலமுறை அழைத்தும் திரும்பாமல் அமர்ந்திருந்தான். வளன் அவன் அருகில் வந்து, “அறிவு, என்ன? ரொம்ப நேரமா கூப்பிடுறேன். காது கேட்காதது போல் உட்கார்ந்திருக்க.” என்று அவன்


தண்டனை

 

 துளசி குழந்தைகள் காப்பகம் என்ற பெயர் பலகை இன்பராஜ், வசந்தாவை இனிதே வரவேற்றது. பெயர் பலகையைப் பார்த்ததும் இருவருக்கும் மனது கனமானது போலிருந்தது. காவலாளி கதவைத் திறந்ததும் இன்பராஜ் காரை உள்ளே செலுத்தினான். காரிலிருந்து இறங்கி இருவரும் குழந்தைகள் காப்பகத்தின் அலுவலகத்திற்குச் சென்றனர். காப்பக பொறுப்பாளர் கதிரரசன் அவர்களை வரவேற்று அமரச் சொன்னார். தொலைபேசியில் ஏற்கனவே எல்லா விபரங்களையும் பேசியிருந்ததால் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் பணிப்பெண்ணை அழைத்து, “வன்யாவை கூட்டிட்டு வா” என்றார் கதிரரசன். வன்யா என்ற


காணவில்லை!

 

 “கோயிலுக்குத் தங்கச்சி ரெண்டுப் பேரையும் கூட்டிட்டுப் போறேன்.” என்று தன் தாய் வள்ளியிடம் கடம்பன் கூறினான். “சரி பத்திரமா கூட்டிட்டுப் போ சின்னப் பிள்ளைங்க கவனமா இரு. நீ வர எவ்வளவு நேரமாகும்?” என்றாள் வள்ளி. “அம்மா, போயிட்டு வர மூணு மணி நேரமாகும்.” என்றான். “ம்ம்… கோயில் கூட்டத்தில் பிள்ளைங்களைக் கவனமா பார்த்துக்கோ. கையில் பிடிச்சிக்கோ தனியா விட்டுடாதே. ராத்திரி பத்து மணிக்குள்ள வந்திரு.” என்றாள் வள்ளி எச்சரிக்கையாக. “ஏன்மா? இப்படிப் பயப்படுறீங்க. நான் பத்திரமா


கடன்

 

 “மருதண்ணே, என்ன? பலத்த யோசனையில் இருக்கீங்க. நான் கூப்பிறது கூடக் காதில் விழலையா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் வேலு. “ஒண்ணுமில்லை வேலு நம்ம சுரேஷ் பொஞ்சாதி ரெண்டாயிரம் ரூவா கடனா வாங்கினா சம்பளம் வந்ததும் கொடுத்துக்கிறேன்ன்னு சொன்னா.” என்றான் மருது. “சரி மருதண்ணே, இப்படி யோசிக்கிற அளவுக்கு இப்ப என்ன ஆச்சு உங்களுக்கு?” “அதில்லை வேலு, அவ வாங்கிட்டு போய் மூணு மாசம் ஆச்சு. அதுக்குப் பிறகு அவ வரவே இல்லை. நானும் அவளைப் பார்க்கலை.


இணையதளக் காதல்

 

 ஆர்த்தி அலுவலக வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருப்பது போலிருக்கக் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே… “காபி குடிச்சிட்டு வரலாமா?” என்று கிஷோர் கேட்டான். அவனுடன் செல்ல ஆர்த்திக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியின்றிச் சென்றாள். கிஷோர் இந்த அலுவலகத்தில் சேர்ந்த நாள் முதல் இவளையே சுற்றிச் சுற்றி வருகிறான். ஆனால், இவள் அவனைக் கண்டு கொள்வதே இல்லை. “ஆர்த்தி, நான் பல தடவை கேட்டும் என்


வெற்றி

 

 அமீர் மஹால் கரவொலியல் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தர்க்கும் அவன் மனைவி காவ்யாவுக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தினர். அதைக் கண்ட அவன் நண்பன் தீபக், “மகிழ்ச்சியா இருக்க வேண்டிய நேரத்தில் உங்களுக்கு ஏன் இந்தக் கண்ணீர்?” என்றான். “இந்த வெற்றி சாதரணமானது இல்லை. என் மகன் வினோத்தின் உணர்வுகளும் திறமைகளும் மிதிக்கப்பட்டப்ப அவன் திறமையை வெளியில் கொண்டுவர அவனும் அவன் நண்பர்களும் எடுத்த முயற்சியின் வெற்றி.” என்றான் சுரேந்தர் “ஒண்ணும்