கதையாசிரியர் தொகுப்பு: ஐ.ஆர்.கரோலின்

21 கதைகள் கிடைத்துள்ளன.

உணர்வில்லாத இனமும் கெடும்

 

 ஓளிவேலன் ஊரில் பெரிய மனிதர், ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தவர், யார் உதவி என கேட்டு வந்தால் இல்லை என சொல்லமால், தன்னால் முடிந்த உதவியை உடனே செய்துக் கொடுப்பார், பல நல்ல குணங்கள் அவரிடம் இருந்தாலும், தன் சாதி என்பதை, எப்போது விட்டுக் கொடுக்க மாட்டார், சாதி என்பது அவருக்குள் ஆல மரமாக வேறுன்றி நிற்கிறது. “ஏய் பாண்டி உன்கிட்ட எத்தன தடவ சொல்றது, மண்டைல எதையும் ஏத்திக்காத” என்றார் ஒளிவேலன். “நான் என்னங்கய்யா செஞ்சேன்”


சினமிகுந்தால் அறம் கெடும்

 

 கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஓடி வந்து அனிஷ் கால்களை தழுவிச் செல்ல, அதை ரசிக்காமல் அவன் சிந்தனை வேறு எங்கோ சுழன்றுக் கொண்டிருந்தது. கடற்கரையில் நடக்கும் எதுவும் அவன் காதுகளில் கேட்கவில்லை. அவன் நண்பன் அழைப்பது மட்டும் அவன் காதில் கேட்டுவிடுமா என்ன? “என் காதலில் உண்மையில்லையா? நான் எங்கு தவறு செய்தேன்?, நான் பலமுறை யோசித்தாலும், என் மீது எந்த தவறும் இருப்பது போல் தெரியவில்லையே, பிறகு ஏன் என்னை நிராகரித்தாள்?, நான் என்ன வேண்டுமானளவு,


விலை மதிப்பு

 

 “பரமு உன் பொஞ்சாதி நிறை மாசமா இருக்கா, அதனால் எங்கேயும் போகாத, தங்கச்சி கூடவே இரு, இந்த நேரத்துல நீ பக்கத்திலதான் இருக்கனும்” “நான் எங்கேயும் போகமாட்டேன் தேவா, ஆனால் வேலை வந்துட்டா என்ன பண்ண” “ஆமா பரமு நீ கலெக்டர் உத்தியோகம் பார்க்க, உயிரை எடுக்கும் வேலைதானே, அதுக்கு ஏன்? இவ்வளவு கவலை உனக்கு” “செய்யும் தொழிலே தெய்வம் தேவா, எப்படி கவலைப்படமா இருக்க முடியும்” “வேணாம் பரமு நீ பண்ற வேலையை தெய்வத்துக்கு சமமா


உதவி

 

 நாகராஜன் வழக்கம் போல் செல்லும் ஆசிரமத்துக்கு, காலையில் வருபவர் அன்று மதியம் வந்திருந்தார். மாதம் தவறாமல் ஆசிரமத்திற்கு வந்து கொடுக்கும் பணம் பத்தாயிரத்தையும், ஆசிரம நிர்வாகியிடம் கொடுத்தார். அவர் கொடுத்துவிட்டு, எப்போதும் ஆசிரமத்திலுள்ள குழந்தைகளிடமும், முதியோர்களிடம் உரையாடி விட்டுதான் செல்வார். அன்றும் அதே போல் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்குள்ள காவலாளியிடம் ஒரு பையன் வருவதும், வந்து ஏதோ கேட்பதுமாக இருந்தான், அதை நாகராஜன் கவனித்துக் கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் ஆசிரமத்தில் மீதமிருந்த சாப்பாட்டை


காதல் சொல்லப் போறேன்

 

 அஸ்வின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் அப்பா, அம்மா, அண்ணன் என்று அந்த வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து வருபவன். சென்னையில் தனியார் கல்லூரியில் பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். அஸ்வின் கல்லூரியின் முதலாமாண்டு காலடி எடுத்து வைத்த அன்றே, காதல் தேவதை பிரியாவை கண்டு கொண்டான், அவளைப் பார்த்த அந்த நொடியில் இருந்தே அவள்தான் தனக்கு, அவளைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று முடிவு செய்துக் கொண்டான். கல்லூரிக்கு தினமும் சென்றது அவளை