கதையாசிரியர் தொகுப்பு: ஐரேனிபுரம் பால்ராசய்யா

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஊரில் ஒரு மாதம்

 

  துபாயிலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேருவேன் என்ற கோபியின் வார்த்தையில் ஆனந்த பரவசமடைந்தார்கள் அவனது மனைவியும் குழந்தைகளும் உறவினர்களும். மதியம் ஒரு மணிக்கு கோபியின் மனைவியும் குழந்தைகளும் அவனது அப்பா, தம்பி, மச்சான் என ஒரு கூட்டமே மார்த்தாண்டத்திலிருந்து வாடகைக்கு கார் பிடித்து மதியம் மூன்று மணிக்கே விமான நிலையம் வந்து காத்திருந்தனர். மணி ஐந்தாகியும் விமானம் வந்தபாடில்லை. ’’அம்மா அப்பா எப்பம்மா வருவாரு!’’ என்ற அவளது மூத்த


சுவர்

 

  மயில்சாமி வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு ஊர் வந்தபோது முதல் இரண்டு நாட்கள் தனது உறவுக்காரர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டான். நாட்கள் நகர நகர அவனுக்கு கிடைத்த மரியாதை காற்றில் கரையும் கற்பூரம் போல கரைந்து போனது. வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சேமித்த இரண்டு லட்சம் பணத்தை ஏதோ இரண்டு கோடி சம்பாதித்ததைப்போல தனது மனைவி விஜிலாவிடம் சொல்லி பெருமை பேசிக்கொண்டான். அந்த பணத்தை வைத்து ஊரில் வியாபாரம் தொடங்கலாம் என்ற தனது எண்ணத்தை விஜிலாவிடம்


தெரிந்த வழி

 

  தகசில்தார் அலுவலகத்தில் தனது மகள் சரசுவதிக்கு சாதிச்சான்றிதழ் வாங்கப்போய் நின்று நின்றுகால்வலித்தது முத்துலட்சுமிக்கு. மதியம் மூன்று மணி வரை பசியோடு காத்திருந்தும் சான்றிதழ் கிடைத்த பாடில்லை. பக்கத்திலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தபோது பியூண் வந்து அவளது பெயரை சொல்லி அழைத்தான்.. “ நீ கிறிஸ்டியன் சாம்பவர்ன்னு சர்டிபிகெட் கேட்டிருந்தா உடனே கிடைச்சிருக்கும், நீ எஸ்.சி இந்து சாம்பவர்ன்னு கேக்கறதனால நாளைக்கு உஙக வீட்டுக்கு அதிகாரிங்க வந்து பரிசோதனை பண்ணின பிறகுதான் சர்டிபிகெட் கிடைக்கும்!’’ சொல்லிவிட்டு பதிலுக்குகூட


கட்டவிழும் கரங்கள்

 

  அலுவலக விஷயமாக சென்னை சென்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த சரவணன் அழைப்பு மணியை அடித்தபோது ஒடிச்சென்று கதவைத் திறந்து அவன் கரம் பற்றி வீட்டுக்குள் அழைத்து வரவேண்டும் என்ற ஆசை அவன் தாயார் தங்கம்மையின் மனதில் எழுந்து அடங்கியது. அதற்கு முன்பாகவே அவனது குழந்தைகள் முந்திக்கொண்டு “அப்பா வந்தாச்சு” என்ற ஆனந்தத்தோடு கதவை திறந்து வைத்து அவன் விரல் பிடித்து உள்ளே அழைத்து வந்தார்கள். அவனது மனைவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு “பிளைட்


வேட்டி சட்டை

 

  பள்ளிக்கூட வராந்தாவில் படுத்துக்கிடந்த மொக்கையனை குளிர் அடர்த்தியாய் சூழ்ந்து கொள்ள உடல் நடுங்கத்தொடங்கியது. இடுப்பில் கட்டியிருந்த லுங்கியைப் பிரித்து கழுத்துவரை போர்த்தி தனது மொத்த உடம்பை சுருக்கி அந்த லுங்கிக்குள் மறைத்தான். மார்த்தாண்டம் காளைச்சந்தைக்கு சென்றுகொண்டிருந்த மாட்டு வண்டி எழுப்பிய சத்தத்தில் மிச்சமிருந்த அரைதூக்கமும் தொலைந்து போக, எழுந்து லுங்கியை இடுப்பில் கட்டிக்கொண்டு பீடியை பற்ற வைத்தான். அருகிலிருந்த ஓட்டலின் அறை விளக்குகள் உயிர்த்தெழ மணி நான்கு என்பதை உணர்ந்தான். முடிந்து போன பீடித்துண்டை சாலையின்