கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ஷங்கரநாராயணன்

35 கதைகள் கிடைத்துள்ளன.

கால் எழுத்து

 

  இதெல்லாம் உண்மையல்ல என்றே நினைக்க அவன் பிரியப்பட்டான். உண்மையல்ல என்றால் பொய். பொய் என்பதென்ன? பொய் என்பது நிழல். நிழலுக்கு உருவம் அத்தியாவசியம் அல்லவா? தமிழில் துணையெழுத்து போன்றது பொய். துணையெழுத்து தனியே அமையுமா?. துணைக்கால் எழுத்து. தனியே அவனை நோக்கிப் பிய்த்து வீசப்பட்டது கால்தான். அது முற்றிய இரவு. நிலா அற்ற இரவு. ரயில் தண்டவாளத்தில் அவன் – அந்த இன்னொரு. அவன் நடந்து வருகிறான். நான் இரு தண்டவாளப் பாதை கருங்கல் குவியல்களுக்கு


கடிகாரத்தை முந்துகிறேன்

 

  ராத்திரி என்னவோ படம் டி.வி.யில் போட்டார்கள். ஒரே சிரிப்பு. நிறைய சிரிப்பு நடிகர்கள் அதில் இருந்தார்கள். சிரிப்புக் கூட்டணி… இப்போதெல்லாம் சிரிப்புப் படங்களாகத்தான் அதிகம் எடுக்கிறார்கள். செலவு கம்மி. சட்டென்று எடுத்து முடித்து விடலாம். ஜனங்களும் சிரிக்க விரும்புகிறார்கள். வாழ்க்கை மிரட்டுவதாய் இருக்கிறது அவர்களுக்கு. நகர வாழ்க்கையின் அசதி. கிரெடிட் கார்டு பயமுறுத்தல்… ஜனங்கள் சிரிக்க விரும்பினார்கள். யாராவது யாரையாவது உதைத்தாலே அவர்கள் சிரித்தார்கள். அன்றாட வாழ்வியல் நியதிகளில் சிக்கி மிதியும் உதையும் படுகிறவர்கள்- வதைபடுகிறவர்கள்


பரிசுச்சீட்டு

 

  இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான். மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி ‘இன்னிக்குப் பேப்பரைப் பார்க்கவே விட்டுட்டது’ என்றாள். ‘குலுக்கல் முடிவு வந்திருக்கா பாருங்க.’ ‘ஆமா, இருக்கு,’ என்றான் டிமிட்ரிச். ‘ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?’ ‘இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்…’ ‘நம்பர் என்ன?’ ‘வரிசை 9499 – எண் 26′ ‘சரி… பாத்திர்லாம். 9499 அப்புறம் 26…’


மெழுகுவர்த்தி

 

  ஏ ப்ளஸ் பி – என்று அண்ணன் படிப்பான். குடுவையில் ஏதாவது வாயு சேகரிக்கும் முறை பற்றிப் படிப்பான். அக்பரின் சாதனைகள் படிப்பான். சர்க்கரை அதிகம் கிடைக்கும் ஏதோ நாடு பற்றிப் படிப்பான்… அடுத்த வீட்டுக்காரன் பற்றித் தெரியாது. அட்டையே பார்த்திராத புத்தகமும் அதன் ஆசிரியரும் பற்றித் தெரிந்து கொள்வான்… அறிவை விருத்தி செய்கிறான். வகுப்பில் முதல் ஐந்துக்குள் இடம். அண்ணன் பற்றி ஐயாவுக்குப் பெருமை உண்டு. இவன் கிரிக்கெட்டில் டென்டுல்கர் எத்தனை ரன் எடுத்தான்


பேய்

 

  ரமணி பேயைப் பார்த்து விட்டதாய்ச் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பேய் வீட்டை நெருங்குகையில் திடுமெனத் தெருவிளக்குகள் அணைந்து விடுகின்றன. பெரும் இருள் கவ்வி விடுகிறது. முக்கியமாகப் பேய்கள் நமக்குத் தெரிந்த அடையாளங்களிலேயே நம்முன் வந்து ஏமாற்றி விடுகின்றன. இதில் அத்தனை பேய்களுமே சாமர்த்தியசாலிகள். ‘பேய் உனக்கு யார் உருவத்தில் வந்தது இவனே?’ என நான் ரமணியைக் கேட்டேன். ‘உன் உருவத்தில்’ என்றான் ரமணி. நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். மழுமழுவென்று லேசாய் மீசை துளிர்க்கிற முகம்…