கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ஷங்கரநாராயணன்

35 கதைகள் கிடைத்துள்ளன.

குடும்பப் புகைப்படம்

 

  அப்போது பிச்சைக்கனிக்கு ஆறேழு வயதிருக்கும். பாட்டையா இறந்துபோய் வாசல் நிரம்பி வழிந்தது. பெஞ்சுகளில் திண்ணைகளில் மரத்தடியில் என சாதிசனம் நண்டு சிண்டு பரிவாரங்களுடன் திரண்டிருந்ததில் அவனுக்கு ஒரே கிறுகிறுப்பு. ஆனந்த போதை. மூக்கை உறிஞ்சியபடி பரபரப்புடன் சுற்றி வந்தான். குமாரசாமியைக் குனியச்சொல்லி பச்சைக்குதிரை தாண்டினான். கிளியந்தட்டு, கல்லா-மண்ணா, செதுக்குமுத்து என ஆட்டம் மாறிக்கொண்டே வந்தது. ஐஸ்பாய் ஆரம்பிக்கும்போது செட்டியூரணி பெரிய பொட்டு அத்தை வந்து ‘ஏல இங்கன வாங்க’ன்னு எல்லாத்தையும் பொதுப்படையா கூப்ட்டா. ‘என்னத்தை, சோறாயிருச்சா?’


ஆண்மேகம் பெண்மேகம்

 

  இந்த உலகம் இத்தனை சந்தோஷமானதா என அவளுக்கு ஆச்சரியமாய், திகைப்பாய் இருந்தது. உஷாவின் மறுபெயர் நெருப்பு அல்லவா… சற்று தள்ளி ஆண்களை நிறுத்தி, நிறுத்தி அவள் பேசுவதான உணர்வலைகளால் ஆண்கள் அவள் அருகில் தாக்கப்பட்டார்கள். அதனால் அவளைவிட- அவர்கள் அவளிடம் சிறு எச்சரிக்கையுணர்வுடன் பேசத் தலைப்பட்டார்கள். அலுவலகம் கலகலவென்று இல்லை. வெலவெலத்துக் கிடந்தது. சிரிக்கவே அங்கே முடியாதிருந்தது. எனினும் மெளனமும் பழகப் பழக அழகுதான். அநாவசியப் பேச்சு இல்லை. வம்பு இல்லை. அவரவர் வேலைகள் ஒழுங்காக


வித்யாசாகரின் ரசிகை

 

  வித்யாசாகரை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. ஆள் அப்படியே மாறாமல் மீதமிருந்தாற் போலிருந்தது. குறுந்தாடி. நீள நேரு பாணி குர்தா ஜிப்பா. ‘ஏய்’ என முதுகு பின்னால் கேட்ட எழுச்சி மிக்க குரல் ஒன்றே போதும் அவனை அடையாளம் புரிந்து கொள்ள. தொடர்ந்து முதுகில் படாரென்று அடி. முரட்டுத்தனமாய் என் தோள்களைப் பற்றித் திருப்பிப் பாதி அணைத்தபடி, ‘அர்த்தநாரி, நீதானா? எவ்ள வருஷம் ஆச்சி – இல்ல? ஏ அப்பா!… எப்டி இருக்கே?


கல் குதிரை

 

  ராத்திரி பக்கத்தில் படுத்திருந்த அப்பாவைக் காணவில்லை. காலையில் அருகில் இல்லாமல், பின்னர் தேடி கோவில் மண்டபத்திலோ, ஆற்றங்கரையிலோ, தேர்முட்டியிலோ கண்டுபிடித்துக் கூட்டி வருவது உண்டுதான். அவர் இல்லாதது கவலைப் படுத்தவில்லை. அவனும் மாமாவும் அம்மாவுமாய் ராத்திரி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த ஓரம் அப்பா படுத்துக் கிடந்தார். பேசுவதை அவர் நிறுத்தி வருடங்கள் ஆகின்றன. கேள்வி எதுவும் கேட்டால் கூடவும் ஆம் – இல்லை என்று எதுவும் சொல்ல மாட்டார். சாப்பாடோ காப்பியோ உள்ளே


வண்ணச்சீரடி

 

  ஆனந்தி இப்போது நடக்க ஆரம்பித்திருந்தது. வீட்டு வராண்டாவில் நடைவண்டி வைத்து அதை நடத்தினால் என்ன வேகம். வேகம் அதிகரிக்க அதிகரிக்க நடையில் தறிகெட்டு ஒரு ஓட்டம். ‘பாத்து மெதுவா மெதுவா’ என்று பிடிக்க வந்தால் கையைத் தட்டிவிட்டு விடுகிறது. அந்த விளையாட்டுக்கு அம்மா ஐஸ்வண்டி என்று பெயர் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘ஸ்’ என்று உயரத்தில் நடைவண்டியைக் காட்டிக் கேட்கும் அது. தடதடவென்று தொடையெல்லாம் அதிர ஒரு நடை, நடையோட்டமாகி நேரேபோய்ச் சுவரில் டாமாரென்று முட்டி, வண்டியைத்