கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ஷங்கரநாராயணன்

35 கதைகள் கிடைத்துள்ளன.

கல்லறைக்குச் செல்லும் வழி

 

  நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம் வீடுகள். புதிதாய் முளைத்தவை. சில இன்னும் முடிவடையாதவை. தாண்டி வயல்கள். சாலையின் இருமருங்கும் மரங்கள். மூப்பாகிப்போன, தாழத் தொங்கும் அதன் கிளைகள். சாலையில் சில இடங்களில் தார் மிச்சமிருந்தது. இடையிடையே மொண்ணையாயும் இருந்தது சாலை. கிளைப்பாதையில் சரளைக்கல் எடுப்பு. நடைபாதை போல அழகாய்க் கிடக்கிறது. சாலை, மற்றும் கூடச் சரிந்திறங்கும் கிளைப்பாதை, இரண்டன் நடுவே சிறு


சமுத்திர ஆண்டவர்

 

  அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின் உடல்களும் கரையில் ஒதுங்கின. அதற்கடுத்த ஒன்பது நாளும், தேவாலயத்தை நோக்கி மேடேறும் தெரு நெடுகிலும், கையால் செய்த சவப்பெட்டிகளின் வரிசை. முழுக்க மூடிய கருப்பு அங்கிகளுடன் விதவைகள், வேதாகமத்தில் வரும் பெண்களைப் போல அழுதபடி பின்னே போனார்கள். இப்படித்தான் மாலுமி ஜீன் லினோலும், அவனது மகன் ஆசையும் ஆலய வெளி முற்றத்தில் நல்லடக்கம் செய்யப்


ஜப்பானிய பூகம்பம

 

  கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது. கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி – அவள் ஜப்பானிய உடை அணிந்திருந்தாள், அப்புறம் ஒரு அம்மா. பக்கத்து அறையில் சின்ன வாலிபக் கூட்டணி, என்னவோ வார்த்தையாடியபடி இருக்கிறார்கள். பத்திரிகைக்காரரும், காரியும் அந்த அறைவழியே போகிற வருகிற சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த சிநேகித வட்டம் எழுந்து கொள்கிறது. மாலை நான்கு மணியளவில் அந்தப் பத்திரிகைக்காரரும், பத்திரிகைக்காரியும் அந்த வீட்டின் முன்வளாகத்தில் நிற்கிறார்கள். அழைப்பு மணி


கடலில் கிளைத்த நதி

 

  அவர் பெரிய திருவடி. மூதறிஞர். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு சைவ சமயக் குரவர் எனத் தெளிந்த மகாப் பெரியவர். வற்றிய வரியோடிய தேகத்தில் உதிரத்துக்கு பதிலாகத் தமிழ் ஓடுகிறது. இறைபக்தியே அதன் வளமைச் செழுமை. கண்பார்வை சற்று ஒடுக்கந்தான். செவிப்புலனும் அத்தனைக்கு சிலாக்கியமாய் ‘சொல்லுந்தரமாய்’ இல்லை. எனினும் என்ன… சொல் தரமாய் இருக்கிறதே… முத்தாய்த் தெரிகிற பற்களும், முத்தாய்ப்பு வாக்குகளும். சிந்தனையின் சீர்வரிசை என மாலை தொடுத்தாற்போலப் பேசுகிறார். பூமாலை அல்ல – பாமாலை. திருத்தலம்


கருப்பு சிவப்பு வெள்ளை

 

  கருப்பு. அவள் பேரே அதுதான். கருப்பில் அது தனிரகம். மினுமினுத்த மைக்கா. தென்னம் பாளையின் அடிபோல் முறுக்கேறிக் கிடந்தது உடம்பு. எங்கிருந்து அந்த ஊட்டமும் வளமையும் வந்ததோ.. நல்ல நிமிர்ந்த எடுப்பான நெஞ்சு. சேர நன்னாட்டிளம் பெண் போல… ஆண்களைக் கட்டியாள்கிற, அயரவைக்கிற வசிய ஆளுமை. ஊர் வெட்டியானின் பெண்டாட்டி. அந்தக் கண்ணில் ஒரு அடங்காத்தன்மை அல்லது சவால் இருந்தாற் போல ஆண்கள் உணர்ந்தார்கள் ஏனோ. அவள் என்ன செய்தாள்? அவள் நடந்து போனாள்- அவ்வளவுதான்.