கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.டினேஷ்சாந்த்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஆணாதிக்கம்

 

  நான் எனது திருமணப் போட்டோவை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றோடு எனக்கும் மோகனாவுக்கும் திருமணமாகி சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.அவள் மட்டும் என்னுடன் இருந்திருந்தால் கோவில்,சினிமா,பீசா ஹட் என்று இந்நாள் மகிழ்ச்சியாக கழிந்திருக்கும்.அவள் தான் என்னோடு கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டாளே.மோகனா அழகானவள் மட்டுமல்ல அன்பானவளும் கூட.அதிலும் நான் நோய் வாய்ப்பட்ட போதும் சரி கவலைகளில் உழன்ற வேளைகளிலும் சரி ஒரு தாய் போல் என்னை அரவணைத்தவள் அவள். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்த போதும்


கொலையாளி

 

  நேரம் மாலை ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது.பரந்து விரிந்து கிடந்த சமுத்திரமானது தனது வாயை அகலத் திறந்து சூரியனை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.தனது அவல நிலையை உணர்ந்த சூரியனார் செந்நிற ஒளிக்கதிர்களை வானெங்கும் பரப்பி “அபாயம் அபாயம்“ என்று உலகத்தோருக்கு அறிவித்துக் கொண்டிருந்தார். சூரியனின் இயலாமையை உணர்ந்த சமுத்திரமோ தன் அலைக்கரங்களை முன்பை விட வேகமாக வீசி ஆர்ப்பரித்தது.செந்நிற வானமும் நீலக்கடலும் நுரை கக்கியவாறு கரையை நோக்கி வேகமாய்த் தவழ்ந்து கொண்டிருந்த அலைகளும் கடற்கரையில் பல