கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கோபாலகிருஷ்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மாற வேண்டிய மனங்கள்!

 

  தஞ்சாவூரில் இருந்து, கண்டியூர் வழியாக, திருக்காட்டுப்பள்ளி செல்லும் பஸ்சில் பயணித்து, வரகூரில் இறங்கினேன்; வரகூர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உறியடி உற்சவம், மிக பிரசித்தம். ஆண்டிற்கு ஒரு முறை, பெருமாளை தரிசிக்க வந்து விடுவது என் வழக்கம். கோவில் சிறியது தான்; ஆனால், கீர்த்தி பெரிது. பஸ் நிறுத்தத்திலிருந்து, 20 நிமிஷம் நடந்து, கோவிலை அடைந்தேன். குருவாயூர் கோவில் போன்று, இங்கும் ஆண்கள் சட்டை அணியாமல், வேட்டியுடன் தான் கோவிலுக்குள் செல்ல முடியும். அதனால்,


வீடு

 

  “”உங்க தம்பி துபாய்லேருந்து போன் பண்ணினார்” அலுவலகத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன். ஃப்ரெஷ் செய்து கொண்டபின் டி.வி.க்கு எதிரில் வழக்கமான இடத்தில் உட்காரும்போது லட்சுமி சொன்னாள். கையில் ஆவியுடன் காபி. என்னைப்பற்றி – நான் ராமகிருஷ்ணன். ஆண்டு வருமானம் சில லட்சங்கள். ஒழுங்காக வரி கட்டும் தொழில் முனைவன். அழகான மனைவி லட்சுமி. செல்லக்குட்டி ஹரிணி – ஒரே மகள். ஐந்து வயது சுட்டிப் பயல். என் தம்பி ரமணி துபாயில் என்ஜினீயர். எப்போதும் வீட்டுக்குத்தான் ஃபோன்